இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதோடு வினாத்குமார் இப்படத்ததை தயாரிக்கின்றார். இப்படத்தில் விஷாலுடன் எஸ்.ஜே சூர்யாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்.
அத்தோடு இயக்குநர் செல்வராகவனும் நடிக்கின்றார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் செப்டெம்பர் மாதம் விநாயகர் சதுர்ச்சியை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக டி.ராஜேந்தர் பாடிய 'அதிருதா..' என்கிற பாடலை வெளியிட உள்ளனர். இந்நிலையில் இப்பாடலுக்கான புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ஜூலை 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்பாடல் ரிலீஸாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!