தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' என்ற படத்தின் வாயிலாக முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
பாகுபலி படத்தில் இவருடன் இணைந்து அனுஷ்காவும் நடித்திருந்தார். இப்படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்கும் பார்ப்பதற்கு ரியல் ஜோடி போன்று நல்ல பொருத்தம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த படத்தில் நடித்த போது இருவரும் காதலித்ததாகக் கூட ஒரு தகவல் பரவியது.
இந்நிலையில் தற்போது பிரபாஸ் இயக்குநர் ஓம் ராவுத்தின் 'ஆதிபுருஷ்' என்ற படத்தில் ராமராக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் உடைய டீசர் வெளியான நிலையில், வீடியோகேமில் வரும் கேரக்டர்களைப்போல காட்சி இருப்பதாக கூறி நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்தனர். மேலும் இந்தப் படமானது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக உள்ளது.
இவ்வாறாக ஆதிபுருஷ் படம் ஜனவரி 12-ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிராபிக்ஸ் பிரச்சனையால் படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதிபுருஷ் படத்தில் ராமராகவும், சீதாவாகவும் நடித்துள்ள பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் இருவரும் காதலிப்பதாகவும் இருவரும் அவ்வப்போது டேட்டிங் சென்று வருவதாகவும் ஏற்கெனவே தகவல்கள் பரவி இருந்தன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த வாரம் பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோனுக்கு மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது என் ட்விட் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது
Listen News!