சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.
இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ்க்கும் மோசடியில் தொடர்பிருப்பதாக ரூசோவ் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் நடிகர் ஆர்.கே சுரேஷ் சுமார் 15கோடி ரூபாய் வரை பணம் பெற்று இருப்பதாக குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 15கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ரூசோவ் வாக்கு மூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!