உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி ஈட்டிய திரைப்படம் விக்ரம். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுக்க வசூலை குவித்து சாதனை படைத்தது.
இதில் கமல்ஹாசனோடு இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
விக்ரம் படத்தில் ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் பல ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு இடத்திலிருந்து ஒவ்வொரு துப்பாக்கிகளை எடுத்து கமல் சுடுவது போல் கிளைமாக்ஸில் மாஸான காட்சி ஒன்று இருக்கும்.
இந்நிலையில் தற்போது இந்த காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
Goosebumps 🔥💥👌 Aandavarey#KamalHaasan #1YearsOfVikram pic.twitter.com/mYwxCweXp3
Listen News!