• Nov 14 2024

பில்லி சூனியம், மந்திரம், அமானுஷ்யம் என மிரட்டும் நாயாடி படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடி இனமான நாயாடிகள் உயர் சமூகத்தினராலும், விலங்குகளாலும் தொல்லைக்கு உள்ளாகின்றனர். இதனால் தங்களை காத்துக்கொள்ள பில்லி சூனியம், மந்திர தந்திரங்களை கற்று சக்தி பெறுகிறார்கள். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையையும் கற்கின்றனர்.

ஆனாலும் நிறைய நாயாடிகள் அழிக்கப்படுகின்றனர். காட்டுக்குள் பதுங்கி வளரும் ஒரு நாயாடி பெண்ணை மன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசிக்கிறார். வீட்டுக்குள் மனிதர்களை பிடித்து வந்து நரபலியும் கொடுக்கின்றனர்.

இதனால் பொங்கியெழும் மக்கள் அவர்களை வீட்டோடு வைத்து எரித்து விடுகின்றனர். தற்போது நாகரீக காலத்தில் காட்டில் நாயாடியை எரித்த இடத்தில் ரிசார்ட் கட்ட ஒருவர் திட்டமிடுகிறார்.

அங்கு அமானுஷ்ய துஷ்ட சக்திகள் இருக்கிறதா என்று கண்டிபிடுத்து சொல்லும்படி பட்டிணத்தில் யுடியூப் சேனல் நடத்தும் சிலரை அணுகுகிறார். அவர்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு அமானுஷ்யங்கள் இருப்பதை கண்டுபிடிக்கின்றனர்.

அமானுஷ்யங்களால் அவர்களுக்கு ஆபத்து வருகிறது. சிலர் கொல்லப்படுகின்றனர். மீதிபேர் தப்பினார்களா? இவர்கள் காட்டுக்குள் அழைத்து வரப்பட்டதன் நோக்கம்? என்ன என்பது நெஞ்சை உறைய வைக்கும் மீதி கதை.

நாயகன் ஆதர்ஷ், நாயகி காதம்பரி ஆகியோர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். பபின், நிவாஸ், அரவிந்தசாமி, ரவிச்சந்திரன், கீதா லட்சுமி ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நியாயம் செய்துள்ளனர்.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.அமானுஷ்ய உருவத்தால் நண்பர்கள் சிலர் கொல்லப்படும் காட்சி பதற வைக்கிறது.

பிற்பகுதி கதையில் அமானுஷ்ய உருவம், கொலை, திடீர் தீ பற்றுவது, காட்டில் இருந்து வெளியேறுபவர்கள் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்பது என்று விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தி திகிலூட்டி உள்ளார் இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம். கிளைமாக்ஸ் எதிர்பாராதது.

அருணின் பின்னணி இசை பலம். மோசஸ் டேனியலின் கேமரா வனப்பகுதியில் சுழன்று காட்சிகளை அழகாக படம்பிடித்துள்ளது.

Advertisement

Advertisement