• Nov 14 2024

ஆக்ஷனில் ராகவா லாரன்ஸ் கலக்கினாரா..? கவிழ்த்தாரா..? 'ருத்ரன்' படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக தற்போது அறிமுகமாகியுள்ள படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸூம், ஹீரோயினாக பிரியா பவானி ஷங்கரும் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது சரத்குமார், பூர்ணிமா ஆகியோரரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் ருத்ரன் படமானது தமிழ் புத்தாண்டு வெளியீடாக இன்றைய தினம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. இப்படம் ராகவா லாரன்ஸூக்கு கைக்கொடுத்ததா? இல்லையா? என்பது பற்றி திரைவிமர்சனத்தின் மூலமாக நோக்கலாம். 


கதையின் கரு

அந்தவகையில் இப்படத்தின் உடைய கதைக்களத்தை எடுத்துக் கொண்டால் நாசர் - பூர்ணிமா பாக்யராஜ் தம்பதியினரின் ஒரே மகன் ராகவா லாரன்ஸ். அவர் வேலை தேடி சென்ற இடத்தில் பார்த்தவுடன் பிரியா பவானி ஷங்கர் மீது மிகுந்த காதல் ஏற்படுகிறது. ஆனால் இதற்கிடையில் துரதிர்ஷ்டவசமாக உடன் இருப்பவர் கடனாக வாங்கிய பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாக அந்த சோகத்தில் நாசர் இறக்கிறார். 

இதன் காரணமாக வாங்கிய கடனைக் கட்ட பிரியா பவானி சங்கரை திருமணம் செய்த கையோடு லாரன்ஸ் அமெரிக்கா செல்கிறார். பின் ஒரு சில ஆண்டுகளில் தனது மகளுடன் பிரியாவும் அங்கு செல்கிறார். இதனையடுத்து பின்னர் வெளிநாட்டில் இருந்து முதலில் தனியாக சென்னை திரும்பும் பிரியா காணாமல் போகிறார். 

தொடர்ந்து தாய் பூர்ணிமா மறைவுக்காக ஊர் திரும்பும் லாரன்ஸ் பிரியாவை காணாமல் பல இடங்களிலும் தேடுகிறார். இறுதியில் இதற்கு பின்னால் சரத்குமார் இருப்பது தெரிய வருகிறது.  துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் டான் சரத்குமாரின் தம்பிகளை ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து கொலை செய்கிறார். 

இதற்காக லாரன்ஸை சரத்குமார் பழி வாங்க நினைக்க.. இருவருக்குமிடையே என்ன பிரச்சினை என்பதை சென்டிமென்ட், காதல், காமெடி கலந்து பிளாஷ்பேக் காட்சிகளுடன் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள் படக்குழுவினர்.


நடிப்பு எப்படி?

குறிப்பாக காஞ்சனா 3 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின்  ராகவா லாரன்ஸ் படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஸ்க்ரீனில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரிகிறார் லாரன்ஸ்.   ஆனால் அவரின் வசன உச்சரிப்பு காஞ்சனா படத்தை ரசிகர்களுக்கு சற்று நியாபகப் படுத்துகிறது. 

அதுமட்டுமல்லாது நடனத்தில் அவரை மிஞ்ச முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை இப்படத்தின் மூலமாக நிரூபித்திருக்கின்றார் லாரன்ஸ். இயல்பாகவே லாரன்ஸ் காமெடி சென்டிமென்ட் ஆப்ஷன் ஆகிய களத்தில் புகுந்து விளையாடுவார் என்பதால் இப்படமும் அவருக்கு எளிதாக கை கொடுக்கிறது. 

அதேபோன்று இப்படத்தில் ஹீரோயின் ஆக வரும் பிரியா பவானி சங்கருக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் கதை நகர்வதற்கு முக்கிய காரணமாக பிரியா இருக்கிறார். அத்தோடு ராகவா லாரன்ஸுக்கு பொருத்தமான ஜோடியாகவும் திகழ்கிறார்.  

மேலும் டானாக வரும் சரத்குமாருக்கு முதல் பாதியில் அவ்வளவிற்கு காட்சிகள் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் தனக்கு கொடுக்கப்பட்ட வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்களின் குடும்பத்தினரை கொன்று அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் கொடூர எண்ணம் கொண்ட வில்லன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார்.

பலவீனம் 

புதுமையான களம், இரண்டாம் பாதி விறுவிறு திரைக்கதையால் ரசிகர்களை கவர முயற்சித்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் கதிரேசன். ஆனால் அடுத்து நடக்கக்கூடிய காட்சி இதுதான் என எளிதாக யோசிக்கும் அளவுக்கு பலவீனமான காட்சி அமைப்புகள்  இருந்தாலும் அதனை ஆக்ஷ்ன் காட்சிகள் மூலமாகவும், எடிட்டிங் மூலமாகவும் சற்று சரி செய்துள்ளார்கள்.

அத்தோடு வில்லன்கள் கொடூரமாக கொல்லப்படுவது கதைப்படி நியாயப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் வீரியத்தை சற்று குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனக் கூறலாம். 

தொகுப்பு 

ஆகவே மொத்தத்தில் ராகவா லாரன்ஸ் படம் என்றாலே 100% என்டெர்டைன்மென்ட் கேரண்டி என்பதால் இப்படத்தை குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று அனைவரும் பார்க்க முடியும் என்று உறுதியாக கூறலாம்.

Advertisement

Advertisement