• Nov 17 2024

மகனுக்காக பழி வாங்கத் துடிக்கும் ரஜினி.... 'ஜெயிலர்' திரைவிமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து  எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்த நெல்சனுக்கு அடுத்ததாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படம் ரஜினி, மற்றும் நெல்சனுக்கு கம்பேக் கொடுக்குமா என்பதை அறிய பலரும் ஆவலுடன் உள்ளனர். எனவே முதலில் இந்தப் படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம் 

முதலில் இப்படத்தினுடைய கதைக்களம் குறித்துப் பார்ப்போம். அந்தவகையில் நேர்மையாக இருக்கும் தனது போலீஸ் மகனுக்கு எதிரியால் ஆபத்து நேர்ந்தால், மீதம் இருக்கும் குடும்பத்தை காக்க, அவரின் அப்பா என்ன செய்கிறார் என்பதை மையமாக கொண்டே இப்படம் அமைந்துள்ளது.

அதாவது இப்படத்தில் சிலை கடத்தல் மன்னனாக விநாயகன் குழு தீவிரமாக செயல்படுகிறது.  அந்தக் குழுவினரால் கடத்திய சிலை அடங்கிய கண்டெய்னர் லாரி ஒன்று போலீஸ் அதிகாரியாக செயற்படும் வசந்த் ரவியால் கைப்பற்றப்படுகின்றது. 

இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து வசந்த் ரவி காணாமல் போகிறார். ஆகவே வசந்த் ரவி உயிருடன் இல்லை அவரை பழி வாங்கி விட்டார்கள் எனக் கூறப்படுகின்றது. மகனை மிகவும் நேர்மையாக வளர்த்ததால் தான் வசந்த் ரவி இறந்ததாக குற்ற உணர்ச்சியில் அவர்களை பழிவாங்க ரஜினி புறப்படுகிறார். 

இதனையடுத்து அவர்களின் குடும்பத்தினரை கொல்லும் முயற்சியில் வில்லன் குழுவினர் இறங்குகின்றனர். இவர்களுக்குள் நடக்கும் இந்த போராட்டத்தில் ரிட்டையர்ட் போலீஸாக செயற்படும் ரஜினி அதிரடி ஆக்ஷனாக இறங்கி மிரட்டியுள்ளார். இதன் பின்னர் ரஜினி அவர்களை பழி வாங்கினாரா..? இல்லையா..? இதன் பின்னர் நடந்தது என்ன..? போன்ற கேள்விகளுக்கு விடையாக இப்படத்தினுடைய மீதிக்கதை அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு

படத்தில் அதிகளவான காட்சி ரஜினிக்குரியதாக இருந்தாலும், அனைத்துக் காட்சிகளிலும் தூள் கிளப்பியுள்ளார். 

அதேபோன்று ரம்யாகிருஷ்ணன்,  யோகிபாபு, விநாயகன், சுனில் ஆகியோரும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கின்றனர். 

மேலும் சிறப்பு தோற்றத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் என கொடுத்த கேரக்டரை நடிப்பில் சொல்லி நடித்துள்ளார்கள். 

அதுமட்டுமல்லாது தமன்னா நடிகையாகவே படத்திலும் வந்துள்ளார்.


குறை, நிறை 

அப்பா அல்லது குடும்பத்தை கொன்றவர்களை, கொல்ல முயற்சிப்பவர்களை ஹீரோ பழிவாங்குவது என்பது அதிகளவு படங்களில் இடம்பெற்ற ஒரு கதை தான். ஆனால் இப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக மகனை கொன்ற வில்லனை அப்பா பழி வாங்க நினைக்கும் வண்ணம் கதை அமைக்கப்பட்டுள்ளது. இது இப்படத்தினுடைய மெயின் கான்செப்ட் ஆக அமைந்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. 

மேலும் இப்படத்திலும் நெல்சன் அவர்கள் வழக்கமான தனது ஸ்டைல் உடன், ரஜினி ரசிகனாக ஃபேன் பாய் மொமண்ட் ஆக சூப்பரான படமாக ஜெயிலரை நமக்கு கொடுத்துள்ளார்.

அத்தோடு ரஜினியின் ஸ்டைலும், அனிருத்தின் ராக் மியூசிக்கும் சேர்ந்து நம்மளை நுனி சீட்டில் உட்கார்ந்து படம் பார்க்க வைத்துள்ளது.

எல்லா காட்சிகளுமே அட்டகாசமாக அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக இடைவேளை காட்சி மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று யோகிபாபு - ரஜினி இடையேயான காமெடி காட்சிகள் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றது. 

மேலும் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், நிர்மலின் எடிட்டுங்கும் கதைக்கு தேவையான அளவை சிறப்பாக கொடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாது "பொண்டாட்டி கிட்ட பொய் சொல்லியே நரகத்துக்கு போயிடுவோம் போல", "படிச்சாலும், ரிட்டையர்ட் ஆனாலும் வீட்டுல மதிப்பு இல்ல", "சொன்னதுக்கு மேலயும், கீழேயும் இருக்க கூடாது. சொன்னபடி இருக்கணும்", "நான் தான் இங்க கிங்" என ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள வசனங்கள் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கின்றன.


தொகுப்பு 

மொத்தத்தில் ஜெயிலர் படம் மெகா ஹிட் தான். முத்துவேல் பாண்டியனாக ரஜினி ஜெயித்து விட்டார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே ஜெயிலர் படத்தை நம்பிப் போய் தியேட்டரில் பார்க்கலாம்.

Advertisement

Advertisement