• Sep 19 2024

ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்ததா 'ராயர் பரம்பரை' படம்... திரைவிமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கிருஷ்ணா, ஆனந்த் ராஜ், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ராயர் பரம்பரை’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதனை திரைவிமர்சனம் மூலம் தெரிந்து கொள்வோம்.

கதைக்கரு 

அந்தவகையில் முதலில் இப்படத்தினுடைய கதைக்களத்தினை தெரிந்து கொள்வோம். இப்படத்தில் தன் ஆசை தங்கை வீட்டிலிருந்து ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்டதால், தன் ஒரே மகளை பொத்தி பொத்தி வளர்க்கிறார் நடிகர் ஆனந்த் பாபு.  ஆனால் ஜாதகத்தில் இவர் மகளுக்கு காதல் திருமணம் தான் நடக்கும், அதுவும் தந்தையான ஆனந்த் பாபு சம்மதத்துடன் தான் நடக்கும் என ஜோசியர் அவர்களிடம் கூறுகிறார்.

இதனையடுத்து மறுபுறம் கதாநாயகனான கிருஷ்ணா இவர்களது ஊருக்கு புதிதாக வந்து, காதலிப்பவர்களை சகித்துக் கொள்ளாத சங்கத்தில் சேர்ந்து காதலர்களுக்கு எதிராக மிகுந்த ரவுடியிசத்தில் ஈடுபடுகிறார். இவ்வாறான சம்பவங்களுக்கு மத்தியில்  ஜோசியர் கூறியது பலித்ததா, கிருஷ்ணாவின் பின்னணி என்ன, ஆனந்த் பாபு தன் மகளைப் ‘பாதுகாத்து’ திருமணம் செய்து வைத்தாரா..? போன்ற கேள்விகளுக்கு விடையாக இப்படத்தினுடைய மீதிக்கதை அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு 

இதில் நடிகர் கிருஷ்ணா நன்றாக ஆடி, பாடி, காதலித்து, சண்டை போட்டு என அனைத்திலும் மாஸ் காட்டி இருக்கின்றார்.

அதேபோன்று அறிமுக நாயகியாக களமிறங்கியுள்ள சரண்யா கதை பொம்மை போல் வெறுமனே வந்து செல்கிறார்.  

அத்தோடு நாயகியின் அப்பாவாக, கோபம் - காமெடி கலந்து பஞ்ச் டயலாக்குகளை அள்ளிவீசி, லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் அப்பாவாக ஆனந்த் பாபு ரசிகர்களை மிகவும் ரசிக்க வைக்கிறார். 

மேலும் ஜோசியராக வரும் மனோபாலா தன் உடல்வாகாலும் ஜாலி பேச்சாலும் மறைந்தும் நம்மை சிரிக்க வைத்து அவரை நம் கண் முன்னாடி கொண்டு வந்து ரொம்பவும் மிஸ் பண்ண வைக்கிறார். 

அதுமட்டுமல்லாது காதலிப்போரை பிரித்து வைக்கும் சங்கம் நடத்தும் மொட்டை ராஜேந்திரன், காமெடி என்ற பெயரில் பல இடங்களில் கடுப்பேற்றி கண்ணீர் வரவழைத்தும், சில இடங்களில் சிரிக்க வைத்தும் தன் வழக்கமான கதாபாத்திரத்தில் படம் முழுவதும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றார்.


கதை எப்படி..?

இப்படத்தில் ஒன்லைனை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிட்டு அதற்குள் வர முதல் பாதி முழுவதும் முயன்று எங்கெங்கோ தறிகெட்டு திரைக்கதை வேறு பாதை நோக்கி பயணிக்கிறது. 

மேலும் இதில் ஹீரோவுக்காக அடித்துக் கொள்ளும் பெண்கள், இரட்டை அர்த்த வசனங்கள், வயதுக்கு மீறி பேசும் குழந்தைகள், 17 வயது பெண்ணை பாதுகாக்க ஊரில் உள்ள ஆண்களை எல்லாம் சொந்த செலவில் ஃபாரினுக்கும் அனுப்பி ஊர் மக்களுக்கு உதவும் ராயர் என பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று திரைக்கதையை போரடிக்க வைக்கின்றது.

காமெடி எப்படி..?

முதல் பாதியைக் விட இரண்டாம் பாதி ரசிகர்களை சிரிக்க வைக்கின்றது. 

தொகுப்பு 

மொத்தத்தில் ஆனந்த்பாபு, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை என ரசிக்க வைக்கும் காமெடியன்களுடன் களமிறங்கி சிரிக்க வைக்காமல் நம்மை சோதித்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

Advertisement

Advertisement