அஜித்தின் 62-ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக இருந்த நிலையில், பின்னர் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தது லைகா. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாதம் ரிலீஸ் ஆகும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் தந்தை மரணமடைந்த செய்தி அதிர்ச்சியாக வந்தது. இந்நிலையில் தற்போது தந்தையை இழந்த சோகத்தில் அஜித் இருப்பதனால் அப்படத்திற்கான அறிவிப்பை தற்போது வெளியிட வேண்டாம் என முடிவெடுத்து அதனை அடுத்த மாதத்திற்கு லைகா நிறுவனம் தள்ளிவைத்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதுமட்டுமல்லாது ஏப்ரல் மாதத்தில் தான் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக விஜய்யின் லியோ படத்தின் அப்டேட் எப்படி வெளியானதோ அதைவிட பிரம்மாண்டமாக இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
இருப்பினும் படத்தின் ஷூட்டிங்கை வருகிற மே மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அஜித்தின் பிறந்தநாள் மே 1-ஆம் தேதி வருவதால், அன்றைய தினம் கொண்டாட்டத்துடன் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!