• Sep 20 2024

ஆதி குணசேகரன் வந்தாச்சு... மிரட்டலான தொனியில் வந்திறங்கிய அண்ணன்... சந்தோஷத்தின் உச்சத்தில் கதிர்... அட்டகாசமான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் நந்தினி விசாலாட்சியைப் பார்த்து "உங்க பிள்ளை வரணும் இது எல்லாத்துக்கும் ஒரு பதில் சொல்லணும்" என்கிறார். பதிலுக்கு விசாலாட்சி நந்தினியை அடிக்கக் கை ஓங்குகின்றார். உடனே நந்தினி கையை மடக்கி தடுக்கின்றார்.


மறுபுறம் போலீஸ் கதிரை மிரட்டி மரியாதை கெட்டுப் போய்டும் என்கின்றனர். அதற்கு கதிர் நீ யார்கிட்ட பேசிட்டு இருக்காய் தெரியுமா எனக்கூறி போலீசை மிரட்டுகின்றார். போலீஸ் கதிரை போட்டு அடிக்கின்றனர்.


அந்த சமயத்தில் ஆதி குணசேகரன் "டேய்" என்ற மிரட்டலான குரலில் மாஸாக வந்திறங்குகின்றார். அண்ணனைப் பார்த்ததும் கதிர் சந்தோஷத்தில் எழுந்து ஓடுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


இந்தப் ப்ரோமோ வீடியோவைப் பார்க்கும் போது புதிய ஆதி குணசேகரனாக களமிறங்கி இருப்பது நடிகர் வேல ராமமூர்த்தி தான் என்பது தெளிவாகின்றது.      

Advertisement

Advertisement