நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள வரலாற்றுக் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ஓம் ராவத் என்பவர் இயக்கி உள்ள இப்படமானது இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
அந்தவகையில் இப்படத்தில் பிரபாஸ் ராமனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சனோன் நடித்து இருக்கிறார். அத்தோடு இராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்துள்ளார். இவர்களோடு இணைந்து மேலும் பலர் நடித்துள்ளனர்.
பிரமாண்டமாக தயாராகியுள்ள இப்படமானது தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் மாதம் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருக்கின்றது. இதில் ராமனாக நடித்துள்ள பிரபாஸ் பேசும் வசனங்கள் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் விதத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!