தமிழில் 'கைதி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இதனையடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கின்றார். இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வரும் அர்ஜுன் தாஸ் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
இருப்பினும் இதுகுறித்து இவர்கள் இருவருமே விளக்கமளிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த விழா ஒன்றில் அர்ஜுன் தாஸ் கலந்து கொண்ட போது தொகுப்பாளர் அர்ச்சனா அவரிடம் உங்களுக்கு லவ் மேரேஜா அரேஞ்ச் மேரேஜா என கேட்டுள்ளார்.
அர்ச்சனாவின் கேள்விக்கு அர்ஜூன் தாஸ் நோ மேரேஜென பதிலளிக்க, உடனே ஐஸ்வர்யா லட்சுமி வெட்கப்பட்டு சிரிக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா லட்சுமியின் வெட்கத்தில் இருவருக்கும் இடையேயான காதல் வெளிப்படுகிறது என கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாது அந்த வீடியோவினையும் வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!