நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது 'மாவீரன்' திரைப்படம் தயாராகி வருகின்றது. இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் இப்படமானது தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உட்படப் பலரும் நடிக்கின்றனர். இப்படமானது வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 21 வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளார். சமீபகாலமாக வெளியாகின்ற சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களில் இவர் தலையில் தொப்பி அணிந்தவாறே இருக்கின்றார்.
இந்நிலையில் இது தொடர்பாக சிவகார்த்திகேயன் பேசுகையில் "ராஜ்குமார் பெரியசாமி என்னிடம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் வரைக்கும் ஹேர் ஸ்டைல் காட்டக்கூடாது என கூறினார். அதனால் நான் தொப்பி போட்டு இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Listen News!