• Sep 20 2024

தோனி தயாரித்த 'எல்.ஜி.எம்' படம் சுமாரா..? சூப்பரா..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி, தோனி  என்டெர்டெய்ன்மென்ட் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ள நிலையில், இதன் மூலம் தன்னுடைய முதல் படமாக L.G.M என்கிற படத்தை தயாரித்துள்ளார்.


ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், 'லவ் டுடே' பட நாயகி இவனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் நதியா ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நடிக்கிறார். முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படமானது இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை ரசிகர்கள் முன்வைத்த வண்ணமே இருக்கின்றனர்.


அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் "எல்ஜிஎம் படம் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இது மிகவும் எண்டர்டெயினிங்கான படமாக உள்ளது. அதிலும் குறிப்பாக முதல் பாதி நன்றாகவும், இரண்டாம் பாதி ஓரளவு டீசண்ட் ஆகவும் இருக்கின்றமை தெரிகிறது. அத்தோடு நதியா, ஹரிஷ் கல்யாண், யோகிபாபு என அவைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.


மற்றோர் நெட்டிசன் கூறுகையில் "எல்ஜிஎம் படத்தின் ஒன்லைன் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, ஆனால் சுமாரான திரைக்கதையை கொண்டுள்ளது. அத்தோடு படத்தின் நீளம், ஹரிஷ் - இவானா இடையேயான காதல் மற்றும் இவானா - நதியா இடையேயான உறவு என்பவை அந்தளவிற்கு நன்றாக இல்லை, சொல்லப்போனால் எல்ஜிஎம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.


இன்னோர் நெட்டிசன் "எம்.எஸ்.தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது, ஆனால் படம் ரொம்பவும் மட்டமாக இருக்கிறது. நகைச்சுவைக் காட்சிகள் கூட  கட்டாயப்படுத்தி சிரிக்க வைக்கும் படி தான் உள்ளன. வருங்கால மாமியாருடன் பிணைப்பு திறனை அழிக்கும் வகையில் பலவீனமான கதையாகவே இப்படம் இருக்கிறது. காதல் கதையை அந்தளவிற்கு இப்படத்தால் காப்பாற்ற முடியவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.


சின்ன சின்ன வேடிக்கையான தருணங்களும், நிறைய போரிங் தருணங்களைக் கொண்ட ஒரு சராசரிக்குக் குறைவான திரைப்படம் தான் எல்ஜிஎம். ஒன்லைன் அருமையாக இருந்தாலும், அதனை எடுத்துள்ள விதம் மிகவும் மோசமாக உள்ளது. தல தோனிக்கு தயாரிப்பில் இது ஒரு மோசமான அறிமுகம் என குறிப்பிட்டுள்ளார்.


வேறொரு நபர் தனது பதிவில் "நிறைய போரிங்கான விடயங்கள் இப்படத்தில் அமைந்திருப்பதாகவும், ஒன்லைன் இப்படத்தில் அருமையாக இருந்தாலும், அதனை எடுத்துள்ள விதம் மிகவும் மோசமாக வே காணப்படுகின்றது. மொத்தத்தில் சொல்லப்போனால் தல தோனிக்கு தயாரிப்பில் இது ஒரு மோசமான அறிமுகம்" குறிப்பிட்டு இருக்கின்றார்.

இவ்வாறாக எல்.ஜி.எம் படமானது ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement