தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக பாடல்களின் மூலம் அசைக்கமுடியாத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இசையில் வெளிவந்த பல பாடல்கள் இன்றும் நம்முடைய மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
அந்தவகையில் இவரின் இசையில் உருவாகியுள்ள சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் ஆனது வருகிற 30ஆம் தேதி வெளியாகிறது. அதுமட்டுமல்லாது இவர் இசையமைத்த 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படமும் அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அச்சு அசலாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் போலவே பாடி பிரபல மலையாள இசையமைப்பாளர் ஒருவர் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துள்ளார். அதாவது மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த உயிரே திரைப்படத்தில் இடம்பெற்ற 'இரு பூக்கள்' என்ற பாடலை ஏ.ஆர். ரஹ்மான் பாடியிருந்தார்.
இந்தப் பாடலை தான் மலையாள இச்சமயமைப்பாளரான நிகில் என்பவர் பாடி இருக்கின்றார். இது குறித்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.
Wow 👌
pic.twitter.com/c8NESE5DCV
Listen News!