• Sep 20 2024

விஜய்யின் 'நா ரெடி' பாடல்.. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படப்பாடலின் காப்பியா..? ஆதாரத்துடன் சிக்க வைத்த வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார். மேலும் சஞ்சய் தட், கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலரும் நடித்து வருகின்றனர். 


இவ்வாறாக இப்படத்தில் நடிகர்கள் பலரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  அத்தோடு இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.


அந்தவகையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்திற்காக விஜய் பாடிய 'நான் ரெடி' பாடலின் ப்ரோமோ வீடியோ நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் விஜய் பாடிய நா ரெடி பாடல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலும் ஒரே மாதிரி இருக்கிறது என்று கூறி ரசிகர்கள் அப்பாடலை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement