• Nov 14 2024

கையைத் தூக்காத பெண்கள்... மேடையில் மொக்கை வாங்கிய ஜெய்... வைரல் வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  பிரபல நடிகர்களில் ஒருவர் தான் ஜெய். இவர் 2002 -ம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.


இதையடுத்து பல வித்தியாசமான காமெடி படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார்.அத்தோடு இவர் நடிப்பில் கடந்த ஆண்டு குற்றமே குற்றமே, வீரபாண்டிய புரம், பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, காபி வித் காதல் என்று ஐந்து படங்கள் வெளியானது. ஆனால் இதில் எந்த படமும் வெற்றி பெற வில்லை.

இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் தீராக்காதல் படம் வெளியானது. இப்படத்தினுடைய ப்ரமோஷனுக்காக பல பேட்டிகளில் படக்குழுவினருடன் இணைந்து நடிகர் ஜெய்யும் கலந்து கொண்டிருந்தார்.


அவ்வாறான ஒரு பேட்டியில் தொகுப்பாளினி, ஜெய்க்கு எவ்வளவு பெண் ரசிகைகள் என்று கேட்க, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் யாரும் கையைத் தூக்காமல் அமைதியாக இருந்தனர். இதனால் மொக்கை வாங்கிய படி ஏமாற்றத்துடன் நடிகர் ஜெய்யின் முகம் மாறியது. 

இது குறித்த வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றது.


Advertisement

Advertisement