ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஷரோன் ஸ்டோன். இவர் 1992 இல் பேசிக் இன்ஸ்டிங்க்ட் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தார். இந்தப் படமானது அவருக்கு நல்ல புகழை பெற்றுத் தந்தது.
அதாவது இந்தப் படத்தின் மூலம் அவருக்கு ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. ஆனால் இந்தப் படத்தின் மூலம் அவரது மகனை விட்டு அவர் பிரிந்து இருக்க நேரிட்டு உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ளார்.
அதாவது அவர் நடித்த நிர்வாணக் காட்சியால் தனது மகனை விட்டு விலகி இருக்க நேர்ந்ததாக கூறினார். அந்தவகையில் 'ஐ ஹார்ட் ரேடியோ' போட்காஸ்டில் பேசும்போது தான் இதனை வெளிப்படுத்தினார். குறிப்பாக 2000களில் ஷரோன் ஸ்டோன் தனது கணவர் பில் பிரோன்ஸ்டீனிடமிருந்து விவாகரத்து கோரி இருந்தார்.
இதனையடுத்து விசாரணையின் போது நீதிமன்றத்தில் நீதிபதி மகனிடம், "உங்கள் தாயார் செக்ஸ் திரைப்படத்தில் நடிப்பது தெரியுமா? என வெளிப்படையாக கேட்டார். இதனால் விவாகரத்து நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஷரோன் ஸ்டோன் தன்னுடன் வளர வேண்டிய தனது சொந்த மகனை இழந்ததைப் பற்றி கண் கலங்க தெரிவித்தார்.
அதாவது பேசிக் இன்ஸ்டிங்க்ட் படத்தில் 16 வினாடிகள் மட்டுமே இடம் பெறும் அந்த காட்சியில் அவர் தனது கால்களை விரித்து வெளிப்படுத்தும் அந்த நிர்வாண காட்சியால் தான் நிறைய கேலி, மற்றும் விமர்சனங்களை தன் வாழ்வில் சந்தித்ததாக அவர் கூறினார்.
மேலும் இந்த படத்திற்காக நான் கோல்டன் குளோப் விருதுக்கு கூட பரிந்துரைக்கப்பட்டேன், நான் கோல்டன் குளோப்ஸ்க்குச் சென்றபோது, அவர்கள் என் பெயரைச் சொன்னபோது, அறையில் இருந்த ஒரு கூட்டத்தினர் சிரித்தனர் எனவும் ஸ்டோன் மனமுடைந்து கூறினார். எது எவ்வாறாயினும் நிர்வாணக் காட்சியில் நடித்ததால் தன் மகனை இழக்க வேண்டிய சூழ்நிலை வந்திருந்தமை ஷரோன் ஸ்டோனின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
Listen News!