• Sep 21 2024

காஷ்மீரில் விஜய்.. ராமேஸ்வரத்தில் வேண்டுதல் நடத்தும் தந்தை எஸ்.ஏ.சி.. கண்ணீர் மல்க கூறிய விடயம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே கடந்த வருடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அரசியல் காரணமாக ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு ஆனது சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து இன்றுவரை இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமலே இருந்து வருகின்றார்கள். மேலும் விஜய் தற்போது 'லியோ' படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றிருக்கின்றார். இந்நிலையில் அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இன்று ராமேஸ்வரம் சென்று அங்குள்ள தீர்த்தக் கிணற்றில் நீராடி பூஜை வழிபாடுகளை நடாத்தி இருக்கின்றார்.

அந்த நேரத்தில் எஸ்.ஏ.சி ஐ சந்தித்து ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை கேட்டுள்ளனர். இதற்கு எஸ்.ஏ.சி பதிலளிக்கையில் "வேண்டுதலுக்காக இந்தப் பூஜை நடத்தல, இதன் மூலமாக எனக்கு மன நின்மதி கிடைக்கும், ஆறுதல் கிடைக்கும் அதனால தான். இந்த தீர்த்தக் கிணற்றில் குளிப்பதால் மனசு நல்லாய் இருக்கு, உடம்பு நல்லா இருக்கு, நம்மள சந்தோசமாக வைத்திருக்கிற கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காகத் தான் இது எல்லாமே. எங்கேயோ ஒரு பிளாட்போர்ம் இல் இருந்த நான் இன்றைக்கு இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கேன் என்றால் அதற்கு காரணமே கடவுளின் உடைய கிருபை தான்" எனக் கூறியுள்ளார்.


மேலும் தனது மகனுக்கு தொடர்ந்து வெற்றிப் படங்கள் வந்து கொண்டிருப்பதற்கும் காரணம் கடவுளின் உடைய கிருபை தான் எனக் கூறி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது "என் தாய், தந்தையருடைய பிரார்த்தனை, எங்களுடைய பிரார்த்தனை, அவருடைய உழைப்பு" இது எல்லாமே அவரின் வெற்றிக்கு காரணம் எனக்  கூறி இருக்கின்றார்.

மேலும் அரசியல் குறித்துக் கேட்கையில், அதற்குப் பதிலளிக்காது "கோயிலுக்குள்ள வைச்சு என்ன கேட்க வேணுமோ அதை மட்டும் கேளுங்க பதில் வரும்" எனக் கூறி இருக்கின்றார்.  அத்தோடு நீங்க அர்ச்சனை பண்ணிய இந்தப் பிரசாதத்தை உங்க மகனிடம் கொடுப்பீங்களா எனக் கேட்ட கேள்விக்கு "நான் அர்ச்சனை பண்ணும் போது கூடி என் பேருக்கு அடுத்த படியாக விஜய் பேரையும் அதற்கு அடுத்த படியாகத் தான் மனைவியின் பேரையும் சொல்வேன்" எனக் கூறி இருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது "என் மகனுக்காக மட்டுமன்றி என் மகனை நேசிக்கின்ற கோடான கோடி தமிழ் நெஞ்சங்களுக்காகவும் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்" எனக் சற்றுக் கண் கலங்கியபடி கூறி இருக்கின்றார் எஸ்.ஏ.சி.

Advertisement

Advertisement