இந்தோ-கனடிய பாடகி தான் ஜோனிடா காந்தி. இவர் இதுவரை ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஓர் ஹிந்தித் திரைப்படத்தில் பாடினார்
இதனைத் தொடர்ந்து, தமிழ்த் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார்.அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த ஓகே கண்மணி படத்தில் ஜொனிடா காந்தி பாடியிருந்தார்.
தொடர்ந்து அனிருத் ரவிச்சந்தரின் இசையில் ஜோனிடா பாடிய இறைவா, செல்லம்மா செல்லம்மா (டாக்டர்), அரபிக் குத்து (பீஸ்ட்) ஆகிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆன பாடல்களாக மாறின. இப்படி பிஸி பாடகியாக வலம் வரும் ஜோனிடா காந்தி (Jonita Gandhi), தற்போது விநாயக் என்பவரது இயக்கத்தில் தமிழில் உருவாகும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
இப்படத்தை நயன்தாரா -விக்னேஷ் சிவன் தங்களது ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.இது குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டன் பக்கத்தில் அழகான பாடகியை எமது நிறுவனத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தவுள்ளோம் என்று குறிப்பிட்டதைக் காணலாம்.
Listen News!