தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் கனெக்ட்.அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்துது பாலிவூட் நடிகர் அனுபம்கேர், நடிகர் சத்யராஜ், வினய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த நிலையில் இப்டத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்து கொண்டு வருகின்றார்.அந்த வகையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணத்தை அதில் அவர் கூறியிருந்தார்.
அவர் பேசியதாவது : “என்னுடைய ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களாகவே நிறைய வந்தன. அப்போது ஏன் ஹீரோயின்ஸுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் இல்லாமலே இருக்கிறது என தோன்றும். அந்த சமயத்தில் ஒரு ஆடியோ லாஞ்சுக்கு போனாகூட எங்கயாச்சும் ஓரமா நிக்க வச்சிருவாங்க. ஹீரோயின்களுக்கு பெரிய அளவில் மதிப்பு இருக்காது. ஹீரோயின்களைப் பற்றி அதிகமா பேச மாட்டாங்க. அதனால் தான் நான் பட விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க ஆரம்பித்தேன்.
நாம் ஒரு நல்ல இடத்துக்கு வந்தபின்னர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என எண்ணி இருந்தான். ஆனால் நான் அதை பாலோ பண்ணவில்லை. சினிமாவில் பெண்களும் சமமா பார்க்கப்படனும்னு நான் ஆசைப்பட்டேன். அப்போ அது இல்ல ஆனா இப்போ நிறைய படங்கள் பெண்களை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறது. இப்போ நிறைய தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை மையமாக வைத்து படம் எடுக்க முன் வருகிறார்கள். இதெல்லாம் பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது” என அந்த பேட்டியில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!