தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த நடிகை தான் லைலா. கன்னக்குழி அழகியின் மூலம் ரசிகர்களை அசால்டாக கவர்ந்த இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.
அதிலும் குறிப்பாக அஜித்துடன் இவர் இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன. இதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனதோடு நடிப்பிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல பட வாய்ப்புகளை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட லைலாவிடம் சினிமா ஆன் ஸ்கிரீனில் உங்களுக்கு ரொம்ப பொருத்தமான ஜோடி யார் என கேட்டுள்ளனர் அதற்கு எனக்கு பிடித்த ஜோடி என்றால் அது அஜித் தான்.
அஜித்துடன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே அற்புதம் குறிப்பாக தீனா படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது என் சினிமா கேரியரில் மறக்க முடியாத ஒன்று. அஜித் தான் எனக்கு சினிமாவில் ரொமான்ஸ் பண்ண ரொம்ப பொருத்தமான மனிதர் என்று கூறியுள்ளார்.
பிறசெய்திகள்:
- பிரபல நிகழ்ச்சியில் நடிகர், தொகுப்பாளினி இடையே வெடித்த சண்டை-வைரல் வீடியோ..!
- பிரபல டிவி நடிகரை காதலிக்கும் ஏமி ஜாக்சன்? விரைவில் திருமணமா..!
- காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்? கசிந்த வீடியோ..!
- காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்-விக்னேஷ் சிவன்
- “நானே வருவேன்” திரைப்படத்தில் இத்தனை பாடல்கள் இருக்கின்றதா?- முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!