தமிழ் சினிமாவில் நடிகர் தனுசை வைத்து பொல்லாதவன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த வெற்றிமாறன் அடுத்தடுத்து விசாரணை, ஆடுகளம், அசுரன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் விடுதலை படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் சூரி, விஜய்சேதுபதி, சேத்தன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், கொரோனா ஊரடங்கின் போது, ஒடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.பல ரசிகர்கள் முதல் விமர்சனத்தை பார்த்து வட்டு மொபைல் போனில் படத்தை பார்த்துவிடுகின்றனர்.
அந்த காலகட்டத்திலும், லவ்டுடே வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது. பெரிய படமாக இருந்தாலும் சரி, சிறிய படமாக இருந்தாலும் சரி ரசிகர்களின் ரசனை, அந்த படத்தை நாம் எப்படி அனுகிறோம், மக்கள் எப்படி அந்த படத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே தியேட்டர்களுக்கு கூட்டம் வருகிறது.
இதில் லவ்டுடே படத்தை ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களுக்கு இணையாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றார்.மேலும், மணிரத்னம் என்னை மாஸ்டர் என்று அழைக்கும்போது நான் சங்கடமாக உணர்கிறேன். மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தை நான் தியேட்டரில் பார்த்தேன். அதன்பிறகு டேபிபில் டிவியில் 47 முறை பார்த்திருக்கிறேன். இந்த படத்தை பார்த்துதான் நான் ஒரு இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையே நாயகன் படம் பார்த்துத்தான் வந்தது.
இன்றைய காலக்கட்டத்தில் 15 வயது இருக்கும் இளம் தலைமுறையினருக்கு பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து அதேபோல் அல்லது அதை விட சிறப்பான ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். மணிரத்னம் சார் அன்றைக்கும் இன்றைக்குமு் இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். கிரிக்கெட் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் போல் தமிழ் சினிமா அல்லது இந்தியன் சினிமாவுக்கு ஒரு மணிரத்னம் என்று இயக்குநர் வெற்றிமாறன் மணிரத்னத்தை வெகுவாக புகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!