• Sep 21 2024

ஏய் இந்தாம்மா... குணசேகரன் பார்த்தால் என்ன ஆகும்..? ஆதிரை வெளியிட்ட வீடியோவால் கலாய்க்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 

பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர். இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் அவர் காதலித்து வந்த அருணை விடுத்து கரிகாலனுடன் கட்டாய திருமணம் நடந்து முடிந்துள்ளது.


இதனையடுத்து ஆதிரை கரிகாலன் மீது வெறுப்பைக் காட்டி வருகின்றார். அதுமட்டுமல்லாது அருணைப் பார்க்க கூட்டிச் செல்லுமாறு கரிகாலனிடமும் கேட்டிருக்கின்றார். இதனால் கரிகாலன் ஆதிரையை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்தியா என்பவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டைலிஷாக மேக்கப் போடுவது போன்று மேக்கப் போட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். 


இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஏய் இந்தம்மா குணசேகரன் பார்த்தால் என்ன ஆகும்" எனக் குணசேகரன் பாணியில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement