• Nov 19 2024

டேய் சைக்கோ, நீயெல்லாம் ஜெய்க்க மாட்ட அப்படி ஜெயிச்சா – அசீமை திட்டி தீர்த்த காஜல் ...நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி  தற்போது 77 நாட்களை கடந்து இருக்கிறது.இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி,ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 9 போட்டியாளர்கள் மட்டும் உள்ளே இருக்கின்றனர்.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் அசீமும் ஒருவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நடித்த அசீம் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக தொடரிலும் நடித்திருந்தார்.மேலும் இப்படியொரு நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பை கிடைத்திருந்தது.

மேலும் இந்த பிக் பாஸ் சீசனில் ஆரம்பம் முதலே அசீம் பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகின்றார்.போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது, அவர்களின் தொழிலை வைத்து கிண்டல் செய்வது, மற்றவர்களின் தோற்றத்தை கேலி செய்வது என்று தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் அடாவடி செய்து வருகிறார். அத்தோடு பிக் பாஸ் ஆரம்பமாகிய சில நாட்களிலேயே இவர் ஆயிஷாவிடம் சண்டை இட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போது ஆயிஷா கூட இவரது அடாவடித்தனத்தை தாங்க முடியாமல் செருப்பை கழட்டி அடிக்கச் சென்றார் .ஆனாலும் அதையெல்லாம் தட்டி விட்டு தன்னுடைய அடாவடித்தனத்தை தொடர்ந்து செய்து வருகிறார். அதே போல இவர் உண்மையாக இருக்கிறார் என்று இவரை ஆதரிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிராறது.மேலும்  இந்த சீசனில் அசீம் அல்லது விக்ரமன் ஆகிய இருவரில் யாராவது தான் டைடிலை ஜெய்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இப்படி ஒரு நிலையில் அசீம் குறித்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘உனக்கெல்லாம் ஜெயிக்க வாய்ப்பு இல்ல தம்பி, ஏன்னா நீ எல்லாம் ஜெயிச்சா அது தவறான உதாரணமாக ஆகிடும்டா சைக்கோ முட்டாள் என்று பதிவிட்டு இருக்கிறார். காஜலின் இந்த பதிவிற்கு ஆதரவும் விமர்சனங்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

வாராவாரம் மற்ற போட்டியாளர்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வரும் அசிமை வார இறுதியில் கமல் வருத்தெடுப்பதும், அப்போது தலையாட்டி விட்டு பின்னர் மீண்டும் தன்னுடைய அதே பாணியை அசீம் பின் தொடர்வதும் வாடிக்கையாகத்தான் இருந்து வருகிறது. மேலும் இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சிகள் கூட கடந்த வாரம் அசீம், விக்ரமன் மற்றும் சிவினிடம் நடந்து கொண்ட முறையை குறித்து கமல் கண்டித்து இருந்தார்.

ஆனாலும் தான் செய்தது தவறு இல்லை என்பது போலத்தான் அசீம் வாதாடி இருந்தார். மேலும், நான் வெளியில் எப்படி இருந்தது கிடையாது. ஏதாவது பிரச்சனை என்றால் கூட விலகிச் சென்று விடுவேன். இவ்வளவு வாதிட மாட்டேன் என்று அசீம் தெரிவித்து இருந்தார். ஆனால், அசீம் குறித்து அவருடன் நடித்த பல நடிகர்கள் அசீம் படப்பிடிப்பில் கூட எவ்வாறு சக நடிகர்களை தர குறைவாக பேசுவார்கள் என்று பல வீடியோக்களில் கூறியிருக்கிறார்கள்.



Advertisement

Advertisement