• Nov 14 2024

நயன்தாரா திருமணம் பற்றி மறைக்கப்பட்ட விசயம்-வெளிவந்த தகவல்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடியாக விளங்குபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் நானும் ரௌடி தான் என்னும் திரைப்படத்தின் மூலம் நண்பர்களாக அறிமுகமாகி பின்பு காதலிக்க ஆரம்பித்தனர்.

பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் இந்த மாதம் 9ம் திகதி திருமணத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்

இவர்களின் சிவன் திருமணம் முதலில் திருப்பதியில் நடப்பதாக தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் மகாபலிபுரத்திற்க்கு மாற்றப்பட்டு விட்டது. அங்கு இருக்கும் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் திருமணம் நடைபெற இருக்கிறது.

மேலும் திருமணத்திற்கு கிட்டத்தட்ட 200 பேர் வருவார்கள், அதுவும் பலரும் விஐபி என்பதால் பாதுகாப்பு கொடுப்பது கஷ்டம் என்பதால் தான் திருப்பதியில் திருப்பதியில் திருமணம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது வேறு ஒரு காரணம் தான் திருமண இடத்தை மாற்ற காரணம் என தகவல் பரவி வருகின்றது.

அத்தோடு நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரது திருமண நிகழ்வின் வீடியோ உரிமையை ஒரு பிரபல ஓடிடிக்கு ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் தான் திருமணம் மகாபலிபுரத்திக்கு மாற்றப்பட்டு இருக்கலாமென தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement