கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதன் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
அதாவது நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு முறையாக நுழைவரி செலுத்தவில்லை என அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. தனக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
வணிக வரித்துறை மற்றும் நடிகர் விஜய் தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சொகுசு கார் நுழைவு வரி வழக்கில் அபராதம் விதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது என்றும், நுழைவு வரியை முழுமையாக செலுத்தாவிட்டால் அபராதம் வசூலிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் சொகுசு கார் வழக்கையும் முடித்து வைத்துள்ளது உயர்நீதிமன்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- முஸ்லீம் பெண்ணின் வாழ்க்கையை எடுத்துக் கூறும் புத்தம் புதிய சீரியல் ஜமீலா- வித்தியாசமான புரோமோ
- நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கவுள்ள நீதிமன்றம்
- ஊருக்கே வந்து சிவகாமி குடும்பத்துக்கு சாபம் விட்ட சாமியார்– இன்றைய எபிசோட் அப்டேட்
- பாக்யா போனதுக்கு பிறகு இனியா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் கோபி -இன்றைய எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!