• Sep 20 2024

மீண்டும் சூடுபிடிக்கும் வழக்கு... சூர்யாவிற்கு இரண்டு வார கால அவகாசம்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக  சூர்யாநடித்திருந்தார்.

மேலும் அமேசான் ப்ரைமில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. மேலும் ஜெய்பீம் படத்தைப் பார்த்துவிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் புகழ்ந்து தள்ளினார்கள்.


இருப்பினும் இப்படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.. இதற்கு பதிலளிக்கும் வகையில் சூர்யா மற்றும்,  த.செ. ஞானவேல் இருவரும், "குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் எண்ணத்தில் படம் எடுக்கவில்லை" என அவர்களுக்கு விளக்கமளித்தனர். 

இதனைத் தொடர்ந்து குறவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கில் இப்படத்தினுடைய காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்தை தயாரித்து நடித்த சூர்யா மீதும், இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி குறவர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் K.முருகேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசில் புகார் ஒன்றினை அளித்திருந்தார்.


பல நாட்களாக தள்ளிப் போன இந்த வழக்கு ஆனது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி ஹேமலதா, குறித்த வழக்குத் தொடர்பாக சென்னை காவல் துறை, நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மீண்டும் தள்ளிவைத்துள்ளார்.

Advertisement

Advertisement