• Nov 17 2024

ஜெய்பீம் பட வழக்கை உடனடியாக ரத்து செய்யுமாறு தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ஜெய்பீம். இருளர் இன மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு பல விமர்சனங்களை சந்தித்தது. இந்த படத்தில் இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில்,அவர்களை இழிவுபடுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமி காலெண்டரும் மற்றம், குருவின் பெயரை இழிவுபடுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் இயக்குநர் ஞானவேல் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இருவர் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement