இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் "காஃபி வித் காதல்". இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் இணைந்து நடிக்க, இவர்களுடன் மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.
இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார்.
"ரம் பம் பம்" என்ற முதல் சிங்கிள் பாடல், ரீமேக் மிக்ஸ் ஆக யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகி இருந்தது. கமல்ஹாசன் நடிப்பில், பல ஆண்டுகளுக்கு முன் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற 'ரம் பம் பம்' என்ற பாடலை வாலி எழுதி இருந்தார். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.
இதன் ரீமிக்ஸ் தான், காஃபி வித் காதல் திரைப்படத்தின் முதல் சிங்கிளாக இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, "Baby Gurl" என்ற இரண்டாவது பாடலும் வெளியாகி இருந்தது. இதனை யுவன் சங்கர் ராஜா மற்றும் அசல் கோலார் உள்ளிட்டோர் பாடி இருந்தனர்.
இந்நிலையில், தற்போது காஃபி வித் காதல் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்து அசத்தலான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. "Thiyagi Boys" என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்த பாடலில் பிரபல இளம் இசை இமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியும், யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விரைவில் மீண்டும் உங்களை சந்திக்கின்றேன்- தி லெஜண்ட்’ சரவணன் கொடுத்த புதிய அப்டேட்
- அவசர அவசரமாக டெல்லிக்கு கிளம்பிச் சென்ற நடிகர் ரஜினிகாந்த்- அடடே இது தான் காரணமா?
- அப்போ இனிமேல் தமிழில் நடிக்க மாட்டாரா?- சமந்தா எடுத்த திடீர் முடிவால் கடும் சோகத்தில் அவரது ரசிகர்கள்
- 16 வருடங்களுக்கு பிறகு முக்கிய அவதாரம் எடுக்கும் சிம்பு- மீண்டும் காதல் தானா?
- வெற்றிக் கொண்டாட்டத்தில் ராஜா ராணி சீரியல் குழுவினர்- அடடே இதை ஆல்யா மிஸ் செய்திட்டாரே
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!