• Nov 17 2024

என் wife என்னோட friends -அ பார்த்தாலே டென்சன் ஆயிடுவா-பல சுவாரஸ்ய விடயங்களை பகிர்ந்த ஹிப்ஹாப் ஆதி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2015இல் இருந்து இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருபவர் தான் ஹிப்ஹாப் ஆதி. இவர் இயற்றும் பாடல்கள் அனைத்தும் ஹிட் வரிசையில் சேர்ந்து விடும். இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார்.இந்நிலையில் பிரத்தியேக ஊடகம் ஒன்றிற்கு இவர் பேட்டியொன்றினை கொடுத்துள்ளார்.அதிகமான சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்திருந்தார்.

தன்னுடைய பாடசாலையில்  அதிகமான காதல் வந்துள்ளதாக கூறி உள்ளார். ஆனால் அதனுடைய முக்கியத்துவம் அந்த நேரத்தில தெரியவில்லை என கூறியுள்ளார்.அதாவது பசங்க சங்கமா இருந்தெதோடு முரட்டு சிங்கிளா இருந்தாக கூறினார். கடைசியில் அவருடைய நண்பர்கள் எல்லாம் 2,3 என்று தோழிகளை கொண்டுள்ளளாத கூறிந்தோடு அதனாலேயே தான் சிங்கிள் பசங்க பாட்டு போட்டதாக குறிப்பிட்டார்.அவருக்கு தற்போது கல்யாணம் ஆனாலும் அதிகமாக சிங்கிள் பசங்க  பாட்டினை போட காரணம் அந்த சிறுவயது நட்பு என்பதையும் கூறினார்.


உங்கள் மனைவியிடம் இந்த பசங்க சங்க கதைகளை சொல்லி இருகின்றீர்களா? என கேட்டபோது , சிரித்துக்கொண்டே ஆமாம் நான் சொன்னதைவிட என்னுடைய நண்பர் வட்டாரம் வீட்டிற்கு வரும்வேளை மொத்தமாக கழுவி ஊற்றியே சென்றுவிட்டனர் என கூறினார். இவனெல்லாம் யாரு தெரியுமா என்று ஆரம்பித்து நாரு நாரா கிழித்துவிட்டார்கள் என கூறினார்.

அதனால் தனது மனைவிக்கு அனைத்து தெரியும் என்பதோடு அவரோடு நேர்காணலுக்கு வந்த நண்பர்கள் இன்று நடந்த்தையும் சொல்லிவிடுவார்கள் என கூறி இருந்தார்.அப்போது இன்னொரு வினாவும்கேட்கப்பட்டது. 

சினிமாவில் மனைவிக்கு கணவனின் நண்பர்களை கண்டாலே ஆகாது இங்கு எப்படி ? என்று வினாவப்பட்டது. அதற்கு , தன்னுடைய மனைவிக்கும் ஆரம்பத்தில் வெறுப்பாகத்தான் இருந்ததாகவும் காரணம் ஒருத்தர் இரண்டு அல்ல பல பேரை கண்டால் அவருக்கு கோபம் வருவது நியாயமே என்று கூறி இருந்தார்.காரணம் அவர்கள் அனைவரையும் கவனிப்பதற்கு மிகுந்த சிரமம் என்பதாகும். ஆனால் நண்பர்கள் அனைவருமே நல்லவர்களாக இருந்ததால் போக போக எல்லாமே சரியாகிவிட்டது என  கூறி இருந்தார்.எப்போதாவது பாடசாலை கட்டடித்துவிட்டு நண்பர்களாக வெளியில் சென்றது உண்டா என வினாவப்பட்டது? அதற்கு பாடசாலை காலங்களில் அவ்வளவாக சர்ந்தர்ப்பம் அமையவில்லை என்றும் காரணம் வகுப்பில் குறைந்த மாணவர்கள் இருந்ததால் ஒருத்தர் இல்லாவிட்டாலும் இலகுவாக கண்டுபிடித்துவிடலாம் என்பதனால் பாடசலையில் அவ்வளவாகா இல்லாவிட்டாலும் காலேட்ஜில் அதிகமாக அதனை செய்த்தாக கூறி இருந்தார்.


அடுத்த கேள்வியாக நீங்க முதல் முதல் செய்த தவறு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு,இது தவறு இது சரி என்பதற்கு சரியான ஒரு விளக்கம் இன்மையால் இதுதான் முதல் தவறு என்று எதனை குறிப்பிடுவது என வினாவாகவே பதிலளித்திருந்தார்.உடனே திருட்டுதனாமாக இந்த தம் அந்தமாதிரியான ஏதாவது என்று கேட்டபோது என்னுடைய வீட்டில் என்னை சுதந்திரமாகவே வளர்த்தனர் இதனால் நான் விரும்பியதை செய்ய கூடிய சூழலே தனக்கு அமைந்ததாக கூறினார்.

அதிலும் அவரது தந்தை ஒரு யாதார்த்தாமானவர் என கூறி இருந்தார்.அதாவது தன்னை அழைத்து இது உன்னுடைய வாழ்க்கை உனக்கு பிடித்தவாறு வாழு என்பதோடு சில அறிவுரைகளையும் கூறுவாராம் அவரது தந்தை .அதனை கேட்கும் போது தவறே செய்யதேவையில்லை என்ற மனநிலைவந்துவிடுவதாக கூறி இருந்தார்.இவற்றோடு தான் என்ன தவறு செய்தாலும் தந்தையிடம் உடனே சொல்லும் அளவிற்கு சுதந்திரம் காணப்படுவதாக கூறினார். அதற்கு உதாரணமாக அவருக்கு ஒருவருடம் நேரம் கொடுத்து சென்னை சென்று தனியாளாக சாதித்துகாட்டு என்று கூட தந்தை கூறியதாகவும் தான் அதற்கு உடனே சரி என கூறியதாகவும் பேசிஇருந்தார்.


இதுவரை தந்தை எனக்கு தந்த சுதந்திரத்தை அந்த இடத்தில்தான் தான் பயன்படுத்தியதாக கூறி இருந்தார். ஆனால் ஏதோ ஒரு அதிஷ்டத்தில் அது தவறாக செல்லவில்லை என கூறி இருந்தார்.அடுத்தவினாவாக இப்பொழுது நீங்கள் ஏதாவது தவறு செய்ததுண்டா என கேட்க தன்னை சுற்றி இவ்வளவு பசங்க இருக்கும் போது அதற்கான வாய்ப்பே இல்லை என கூறி இருந்தார். மறைந்து செய்வதற்கான வாய்ப்பே தனக்கு அமைந்ததில்லை என்பதனால் தான் தவறு செய்த்தாக தோன்றவில்லை என பேசி இருந்தார்.போட் எக்சாம் மார்க்ஸ் அந்த நேரம் பற்றி கேட்டபோது  அந்த பிரச்சனையே வந்ததில்லை எனவும் தனது வீட்டில் மார்க் எல்லாம் பிரச்சனையே இல்லை என்றும் கூறி இருந்தார். நம்பர் எல்லாம் உன்னுடைய திறமையை தீர்மானிக்காது என தனது தந்தை கூறுவதாக கூறினார்.

உங்களுக்கு யாராவது ரீச்சர் கிரஸ் இருந்ததுண்டா என கேட்டபோது, பாடசாலை முடிக்கின்ற நேரம் ஒரு கணிதபாட ஆசிரியர் வந்தார். அந்த ஆசிரியர் எப்போதுமே ஊக்குவிப்பதை போலவே பேசுவதால் அவர் என்ன சொன்னாலும் கேட்கலாம் என்று தோன்றும் அளவிற்கு அவரை பிடிக்கும் என கூறி இருந்தார்.அவரால்தான் தான் கணிதபாடத்தை கொஞ்சம் ஆர்வமாக கற்றதாகவும் கூறினார் . அத்துடன் தனது மிகப்பெரிய மரியாதை யார் எனில் தன்னுடைய தமிழ் ஆசிரியர் என கூறி இருந்தார். காரணம் தான் 10வது வகுப்பு முடித்தவேளை தமிழில் அதிக புள்ளிகளை பெற்றிருந்ததாகவும் மாவட்ட நிலையில் எல்லாம் தான் வந்ததாகவும் அதுதனக்கு பெருமையா இருந்ததாகவும் கூறினார்.

11ம் வகுப்பில் என்னுடைய பிசிக்ஸ் ஆசிரியர் புதுமாணவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது தமிழில் முதல்புள்ளி பெற்ற பெருமையினை கூறும் போது அந்த ஆசிரியர் எந்த வகையிலும் அது உனக்கு பயன்படாது என்று கூறியதாகவும் உன்கட்டோப் தான் உன் வாழ்க்கையை முடிவெடுக்கும் என்றும் கூறி அவரை அசிங்கப்படுத்தி இருக்கவைத்துவிட்டார்.இந்த விடயம் தனது தமிழ் ஆசிரியருக்கு சென்று இவருக்காக அந்த ஆசிரியர் வகுப்பினுள் வந்து சண்டையிட்டிருக்கின்றார்.

அந்த ஆசிரியரின் பெயர் ராணியம்மாள்.அப்பிடியான ஒரு ஆசிரியர் இருந்ததாலேயாதான் தனக்கு தமிழ்மீது ஆர்வம் ஏற்பட்டதாக கூறினார்.அந்த நேரலையிலேயே இதை பார்ப்பவர்கள் யாராவது வீட்டின் அருகில் அந்த ஆசிரியர் இருந்தா அவரிடம் தான் அவரை கேட்டதாகவும் கூறும்படி கூறிஇருந்தார். இரண்டு வருடம் முன்பு அவரை பார்த்தாக கூறி இருந்தார். அத்துடன் தனது நண்பர்கள்தான் தனக்கு எல்லாமாகவும் இருந்ததாக  கூறினார்.அதனால் இன்று என்னுடன் பாடசாலை , காலேட்ஜில் படித்த அநேக நண்பர்களை மிஸ் பண்ணுவதாக கூறி இருந்தார். 

என்னுடைய வேலையும் அதற்கான நேரத்தை கொடுப்பதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.வேலை என்பதால் தனது நண்பர்களின் விழாக்களுக்கு செல்லமுடியாமல் போனதை எண்ணி கவலைகொள்வதாக கூறி இருந்தார்.சில நேரங்களில் எதுக்குடா இதெல்லாம் செய்யணும் என்ற மனநிலைக்கு கூட சென்றுள்ளதாகவும் கூறி இருந்தார்.ஒரு சிலநண்பர்கள் புரிந்துகொள்வார்கள் உதாரணமா சொல்லபோனால் தனது நெருங்கிய நண்பன் ஒருவன் தனது அக்காவின் திருமணத்திற்கு தன்னைவரவேண்டாம் முதல்ல வேலைய பார் என்றெல்லாம் கூறியதாவும் சொல்லியிருந்தார்.

அதே சமயம் இன்னொரு நண்பன் தொலைபேசி அழைப்பில் என்னடா மச்சான் வரமாட்டியா என்று கேட்டதாகவும் நீ வளர்ந்துவிட்டாய் அவ்வளவுபெரிய ஆளா நீ என கேட்டதாகவும் கூறி இருந்தார்.அவ்வாறான நண்பர் வட்டாரம் இருந்ததாகவும் இன்னுமே தன்னுடைய காலேட்ஜ் நண்பன் ராம் எப்போது தொலைபேசி எடுத்தாலும் அதே காலேட்ஜ்ல பேசுறமாதிரி நாயே என பேசுவதாகவும் என்னதான் நாம பெரியாள் என்று எண்ணினாலும் நண்பர்களுக்கு எப்போதுமே நாம் நண்பர்தான் என்று சுவாரஸ்யமாக கூறிஇருந்தார்.

அதைஎல்லாம் இப்போது மிஸ் பண்ணுவதாக கூறி இருந்தார்.அப்படி கவலைபடும்போது பிறநண்பர்கள் தன்னை சந்தோசமாக பார்த்துக்கொள்வதாகுவும் கூறி இருந்தார்.அதனைதான் நட்பே துணை என தான் கூறுவதாகவும் கூறி இருந்தார்.அதுமட்டுமன்றி அவர்முக்கியமாக கூறியது யாதெனில் பொள்ளாச்சி போன்ற சம்பவங்கில் யாரோ ஒரு 10 நண்பர்கள் சேர்ந்து அவ்வாறு செய்துவிட்டார்கள் என்பதற்காக தன்னுடைய நண்பன் தவறாக செல்கிறபோது சட்டையை பிடித்து கேட்கும் நட்புத்தான் உண்மையான நட்பு என்று கூறி இருந்தார்.இந்த நேர்காணலை காணும் எனது ரசிகர்களுக்கு இதனையே கூறிக்கொள்ள விரும்புவதாக கூறினார்.உங்களுடைய நண்பன் தவறு செய்வானாயின் அவனை திருத்துவது உங்கள் பொறுப்பு என கூறிஇருந்தார்.அத்துடன் எனது ரசிகர்கள் எனது கலையை ரசிப்பதற்காக என்னுடைய அரசியல் கருத்தை அவர்களிடம் திணிக்கமுடியாது என கூறி நேர்காணலை முடித்திருந்தார்.

Advertisement

Advertisement