• Sep 21 2024

நடிகராக வேண்டும் என்ற அவரின் எண்ணம் நிறைவேறி விட்டது- அருள் சரவணனுக்கு வாழ்த்துக் கூறிய தமன்னா

stella / 2 years ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான அருள் சரவணன் கதாநாயகனாக நடித்து பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் தி லெஜண்ட்'. ஜே.டி - ஜெரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதோடு விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தி லெஜண்ட் படம் வெற்றி பெற நடிகை தமன்னா வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “சரவணன் சாரும், நானும் சேர்ந்து நிறைய விளம்பரங்கள் செய்திருக்கிறோம். நடிகராக வேண்டும் என்ற அவரின் எண்ணம் இந்த படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது.

https://twitter.com/tamannaahspeaks/status/1549279744369238016

ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் பண்ணியிருக்கார். இவர்கள் இருவரும் என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானவர்கள். கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கிற்கு சென்று பாருங்கள்” என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement