விஜய் பவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் லாஸ்லியா மரிய நேசன். இலங்கையைச் சேர்ந்த பத்திரிகை வாசிப்பாளர் இவர் என்பதும் தெரிந்ததே.
பிக்பாஸில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து லாஸ்லியா தற்போது கோலிவுட்டில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் ப்ரண்ட்ஸ்சிஃப் கூகுள் குட்டப்பா போன்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
படங்களில் நடிப்பதைத் தாண்டி ஆல்பம் பாடல்களிலும் நடித்து வரும் இவர் தற்போது தனது உடல் எடையை ஒர்கவுட் அதிகமாகச் செய்து குறைத்து இருக்கிறார்.
மேலும் லாஸ்லியா தனது கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று லாஸ்லியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. லாஸ்லியா லீக்ஸ் என குறிப்பிட்ட சில புகைப்படங்களும் அவரது கணக்கில் பதிவிடப்பட்டு இருக்கின்றன.
அதற்கு பிறகு தான் லாஸ்லியா தனது கணக்கு ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்பட்டுவிட்டது என குறிப்பிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!