• Sep 20 2024

ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக்கின் இரண்டாவது கணவர் உயிரிழப்பு- இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஹேங்மேன் என்ற படத்தின் மூலம் 1987ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் அறிமுகமானவர் சாண்ட்ரா புல்லக். இதனை அடுத்து இவருக்கு வாய்ப்புக்கம் குவிய ஆரம்பித்தன.இதனையடுத்து ஏ ஃபூல் அண்ட் ஹிஸ் மணி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார்.இதனை அடுத்து வாய்ப்புக்கள் குவிந்து கொண்டே இருந்தன.

பல ஹிட் படங்களை கொடுத்து வந்த அவருக்கு ஸ்பீடு திரைப்படம் உலகம் முழுக்க அவரை பிரபல்யப்படுத்தியது. அதன் பிறகு While You Were Sleeping, A Time to Kill, Hope Floats, Proposal, Gravity போன்ற படங்கள் மெகா ஹிட்டாகின.இவர் அமெரிக்க டிவி நிகழ்ச்சியில் பிரபலமாக இருந்த ஜெஸ்ஸி ஜேம்ஸ் என்பவரை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 


பின்னர 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து கொண்டார்.பின்னர் ப்ரையான் ராண்டலை காதலித்து வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு அதை வெளியுலகுக்கு உறூதிப்படுத்தினர். அதுகுறித்து பேசியிருந்த புல்லக், எனது இரண்டு குழந்தைகள், ராண்டலுக்கு ஏற்கனவே இருக்கும் ஒரு குழந்தை என மூன்று குழந்தைகளுக்கும் ராண்டல் மிகச்சிறந்த உதாரணம் என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் புல்லக்கின் கணவர் ப்ரையான் ராண்டல் Amyotrophic lateral sclerosis என்ற நரம்பியல் நோயால் அவதிப்பட்டுவந்தார். அதுகுறித்து யாருக்கும் தெரியாமலும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். 

இதுகுறித்து அவர் குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நோயை குணப்படுத்தி ப்ரையனை காப்பாற்றுவதற்காக போராடிய மருத்துவர்களுக்கும், உதவியாக இருந்த செவிலிகளுக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ப்ரையானின் இழப்பை நினைத்து நாங்கள் வருந்துவதற்கு ப்ரைவேசியையும் கேட்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement