ஆர்.ஜே வாக தமது பயணத்தை தொடங்கிய பாலாஜி தற்போது கதாநாயகன், இயக்குநர் என தமிழ் சினிமாவின் பன்முகத் திறமை கொண்ட கலைஞனாக முன்னேறியுள்ளார்.
என்.கே சரவணன் இயக்கத்தில், ஜீ ஸ்டூடியோ மற்றும் போனி கபூரின் பேவியோ பிராய்கட்ஸ் நிறுவனமும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள "வீட்ல விசேஷம்" என்ற புதிய படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ்,ஊர்வசி, அபர்ணா பாலமுரளி போன்றோர் நடித்துள்ளனர்.
"குழந்தை பெற்றுக்கொள்ள வயது தடையில்லை" என்ற சமூக கருத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலில் அள்ளி குவித்து வருகின்றது.அத்தோடு இத்திரைப்படம் 380 முதல் 400 திரையரங்குகளில் தமிழகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்திவருகின்றது. .
இந்நிலையில் இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கள் வெற்றியை கொண்டாடி உள்ளனர். அப்போது பாலாஜி படக்குழுவினருக்கு பரிசுகளை வழங்கினார்.படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராகுலுக்கு விலை உயர்ந்த வாட்ச், தன்னுடன் இணைந்து படத்தை இயக்கிய சரவணனுக்கு தங்கச்சங்கிலி, தனது உதவி இயக்குனருக்கு ஒரு லட்சம் ரூபாய் என பரிசுகளை வழங்கினார்.
பொதுவாக படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்தான் பரிசுகளை வழங்குவார் ஆனால் படத்தின் நாயகன் என்பதால் இந்த பரிசுகளை வழங்கி வழங்கி உள்ளார். இருப்பினும் உதவி இயக்குனர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகைக்கான செக்கில் ஒரு1 லட்சம் என்றும், எழுத்தில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் என்றும் உள்ளது. அந்த தவறை கூட கவனிக்கவில்லை போல் உள்ளது.
பிற செய்திகள்
- நடிகை மீனாவின் கணவர் யார்..?பலரும் அறிந்திடாத தகவல்கள் இதோ..!
- நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்காரில் இருந்த அழைப்பு!
- ‘அந்த’ இடத்தில் வளையம் போட வாக்கெடுப்பு நடத்திய பிக்பாஸ் அபிராமி…குமுறும் ரசிகர்கள்..!
- மீனாவின் கணவனின் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் காரணங்கள்… கதறிய மகள்..!
- காலண்டரில் குறித்து வைத்து சூர்யா செய்யும் செயல் – ரகசியத்தை போட்டுடைத்த ஜோதிகா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!