தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியான விஜய்டிவியில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி தொகுப்பாளினியாக இருந்த வருபவர் தான் தொகுப்பாளினி டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி.
இவர் விஜய் டிவியில் கோஃபி வித் டிடி ,ஸ்பீட் எனப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இது தவிர பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை சுவாரஸியமான பேட்டி எடுத்து வருகின்றார்.
இது தவிர சில திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். திருமண வாழ்க்கையில் தோல்வியைச் சந்தித்தாலும் கெரியரில் தனக்கான ஓர் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்
இந்த நிலையில் நடிகர் ஷாருகானுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவர் கூறியதாவது நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் அவரிடம் சொன்னேன், 'இவ்வளவு வருடங்கள், பல நினைவுகள், நீங்கள் எங்களுக்குக் கொடுத்துள்ள மகிழ்ச்சி, சார், அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர், சிறந்த வாழ்க்கையின் சிறந்தவர் சார். உங்கள் இதயத்தின் மகிழ்ச்சிக்காக நான் தினமும் பிரார்த்தனை செய்வேன் ஐயா
Listen News!