தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் தற்பொழுது தி கிரேமேன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படமானது வரும் 22ஆம் தேதி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கின்றது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற படத்தின் பிரீமியர் ஷோவில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் பங்கேற்றுள்ளார். அப்பா மகன்கள் என 3 பேருமே கோட் சூட் அணிந்து கலக்கலாக உள்ளனர்.
தனது மகன்களுடன் பிரீமியரில் பங்கேற்ற போட்டோக்களை நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் பிரீமியர் நிகழ்ச்சியை தனது மகன்கள் கவர்ந்துவிட்டதாக கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த பிரபல தொகுப்பாளினியான டிடி முதல் ஆளாய் ஓடி வந்து கமெண்ட் செய்துள்ளார். தனுஷின் பதிவுக்கு பதிலாக ஆமாம் சார், அவர்கள் முழுவதுமாக கவர்ந்துவிட்டார்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் ஃபயர் ஈமோஜிகளையும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ், பாடகர் விஜய் யேசுதாஸ், நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் கென் கருணாஸ் உள்ளிட்ட பலரும் தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் பதிவுக்கு ரியாக்ட் செய்துள்ளனர். தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதால் மகன்கள் இருவரும் அப்பா மற்றும் அம்மாவுடன் மாறி மாறி இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
லிங்குசாமி சூட்டிங் செட்டில் என்னை அழ வைக்கவில்லை இது தான் நடந்திச்சு-மனம் திறந்த கிருத்தி ஷெட்டி
- சிம்புவின் லூசு பெண்ணே பாடலில் இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கா?- இவ்வளவு நாளாக தெரியாமல் போச்சே
- பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வில்லன் யார் தெரியுமா?- அட இவரா?
- மறைந்த ஜெயலலிதாவிற்கு இந்த நடிகைதான் ரொம்ப பிடிக்குமாம்? இயக்குநர் செல்வமணி கூறிய தகவல்..!
- வீட்டை விட்டு வெளியே போன பாக்கியா.. ராதிகா எடுத்த முடிவு- பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!