விஜய் தொலைக்காட்சியில் தனது பள்ளி பருவத்தில் இருந்து இன்று வரை தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் Vs கேல்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பட்டையை கிளப்பி இருந்தார்.
ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்த நிகழ்ச்சி என்றால், அது கோப்பி வித் டிடி நிகழ்ச்சி தான்.அது ரசிகர்களிடத்தே தற்போது வரை பேசப்பட்டு வருகின்றது.விஜய் டிவியின் மாபெரும் வெற்றியடைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று கோப்பி வித் டிடி.
தற்போது வழக்கம் போல் இல்லாமல் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் டிடி, தற்போது தனது தம்பியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் தனது தம்பி சுதர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் கூறியுள்ளார்.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்..
Listen News!