• Nov 17 2024

ஹேர் கட் செய்து புதிய ஹேர் ஸ்டைலில் காட்சியளிக்கும் தொகுப்பாளினி டிடி- வைரலாகி வரும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல விஜய் டிவியில் 10 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் தொகுப்பாளினி டிடி. காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நிகழ்ச்சியையும் ரசிகர்களை இழுக்கும் வண்ணம் தொகுத்து வழங்குவார்.

அவர் இருக்கும் நிகழ்ச்சியில் காமெடிக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. அத்தோடு சமீபகாலமாக பிரபலங்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியிலேயே அதிகம் பங்குபற்றி வருகின்றார்.

கொரோனா காலத்தில் இருந்து டிடி எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வருவது இல்லை. மாறாக வெளியூர் செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாகவே உள்ளார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த விக்ரம் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது டிடியின் புதிய வீடியோ ஒன்று வைரலாகிறது. அதாவது அவர் ஹேர் கட் செய்து புதிய ஹேர் ஸ்டைலில் உள்ளார். அந்த வீடியோ தான் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement