• Sep 20 2024

வளைகாப்பைக் கொண்டாடிய தொகுப்பாளினி தியா- வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்கள் பலர் காணப்படுகின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் தொகுப்பாளினி தியா. இவர் சன்டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாகவும் வலம் வருகின்றார்.

இவர் சிங்கப்பூரின் உள்ளூர் கிரிக்கெட் அணியில் வீரராக உள்ள கார்த்திக் சுப்பிரமணியன் என்பவரை 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பாகவே 3 ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் தியா மேனன் கர்ப்பமாக இருப்பதனை சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தியா மேனனுக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.

மஞ்சள் நிற பட்டு புடவையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தியா தனது வளைகாப்பு போட்டோக்களையும் வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார். இதனையொட்டி தியா மேனனுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement