• Nov 10 2024

my3 ரோபோடிக்  திரைப்படம் எப்பிடியிருக்கு? வாங்க பார்க்கலாம்

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, மிஸ்டர் லோக்கல் அகிய  படங்களை இயக்கிய  ராஜேஷ்  இயக்கத்தில் உருவாகி  ஹன்சிகா,  முகேன், சாந்தனு, ஜனனி, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான்  My3


இளைஞர்களின் மனதில் கொள்ளைகொண்ட ஹன்சிகா ரோபோவாக நடித்துள்ளார் , முகேன் ராவ் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் தொழிலதிபர்கள் மற்றும் விஞ்ஞானிகளாக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜனனி ஐயர், விஜே பார்வதி, தங்கதுரை, ராமர் மற்றும் பலர் துணை நடிகர்கள். இந்த திரைப்படத்திற்கு  எஸ்.கணேசன் இசையமைத்துள்ளார்.

புனைகதை காதல் நகைச்சுவை கொண்ட இப்படம் , செப்டம்பர் 15 அன்று அறிமுகமானது திரைப்டம்  எப்படி இருக்கிறது என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே காணலாம் வாங்க..

திரைப்பட கதை

 ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனியின் ஒரே ஓனர் ஆதித்யா வாக பிக் பாஸ் முகேன் ராவ் நடித்துள்ளார்.இவர்  சிறுவயதிலேயே  பெற்றோர்கள் கார் விபத்து ஒன்றில் பெற்றோரை இழந்துவிட்டார், அந்த விபத்தில் இருந்து தப்பித்து விடுகிறார் சிறுவன்(முகேன் ராவ்)  ஆதித்யாவிற்கு யாராவது அவரை தொட்டு விட்டால் உடம்பு முழுக்க அலர்ஜி ஏற்பட்டு விடும் என்கிற அரிதான நோய் ஒன்று இருக்கின்றது.

இதனால் ஆதித்யா பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று படிக்காமல், அனைத்தையும் இணையம்  மூலமாகவே கற்றுக் கொள்கிறார். மேலும், தனது கம்பெனியையும் ஜும் கால் மீட்டிங் வழியாகவே நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் இலியாஸ் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு சயின்டிஸ்ட் ஆக வருகிறார். அவர் கண்டுபிடிக்கும் My3 ரோபோ தான் நடிகை ஹன்சிகா.இவர் தனது முன்னாள் காதலியினை பிரிந்த நிலையில் அவர் போலயே ரோபோவை உருவாக்கி அதனை ஆதித்யாவிற்கு விற்க ஏற்பாடுகள் நடக்கின்றது. இவ்வேளையில் ரோபோ சடுனாக பழுதடைய அந்ரோபோவுக்கு பதிலாக ஆித்யாவிடம் முன்னால் காதலி ஹன்சிகாவை ரோபோவாக  அனுப்பி வை்கின்றார். அதன்பிற்பாடு ஹன்சிகா ரோபோவாக எப்படி நடிக்கிறார்? மைத்திறியை கண்டுபிடிக்கின்றாரா ஆதித்யா?  ஹன்சிகா எப்படி ஆதித்யாவை சமாளிக்கின்றார் என அனேகமான சுவாரஸ்யமான விஷயங்களை கொண்ட பிலிம் தான் இது

My3 வெப்சீரிஸ் பார்க்கலாமா? 

எந்த திரைப்படமனாலும் சரி, தவறு என இருபக்கமும் இருக்கதான் செய்யும் அதுபாேலதான் மைத்திறி திரைப்படமும் ஆரம்பத்தில் முகேனை அறிமுகம் செய்யும் போது அவரை  பணக்கறனாக பில்டப்காட்சிகள் அமையவில்லைெ.அத்தோடு காட்சிகள் விறுவிறுப்பாகவும் அமையவில்லை. இதனை இயக்குனர் ராஜேஷ் கண்டுகொள்ளவில்லையோ என்ற கேள்வியே ரசிகர்களிடையே எடுந்துள்ளது.

நடிகை ஹன்சிகா மைத்திரியா நடிக்கும் போது கூட ரோபோவாக தெரிகிறார். ஆனால் ரோபோவாக வரும் காட்சிகளிலும் ஓவர்  நடிப்பை வெளிப்படுத்துகிறார்.கதைக்குமேலாகவே ஹன்சிகாவின் ஆக்டிங்தான் இதனை பார்க்கும் போது இயக்குனர் சரியாக வழிப்படுத்தவில்லையோ என்கின்றது சந்தேகம்தான்

ஆரம்பத்திலிருந்து, படத்தில் வரும்  காட்சிகளும் எல்லாமா எதார்த்தமாக இல்லாமல் ஒரு செயற்கையானதாகவே   தெரிவது இந்த திரைப்நடத்திற்கு  மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. ஆனாலும் ஒரு ரோபோவாகவும் பெண்ணாகவும் ஹன்சிகாவின் ஆற்றல்மிக்க நடிப்பு படத்தில்  வலுவானதாக இருந்தது, அதே நேரத்தில் சாந்தனு, முகேன் மற்றும் சக நடிகர்கள் ரசிகர்களை மகிழ்வித்தும் இருக்கிறார்கள் .ரைம் இருந்தால் நீங்களும் இந்த  my3திரைப்படத்தை பாருங்க .

Advertisement

Advertisement