• Nov 17 2024

சசிகுமாரின் அயோத்தி திரைப்படம் எப்படி இருக்கு?- மதத்தை விட மனித நேயமே முக்கியம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சசிகுமார் நடிப்பில், வெளியாகியுள்ள திரைப்படம் தான் அயோத்தி. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும்... மிகவும் நேர்த்தியாக இப்படத்தை இயக்கியுள்ளார் மந்திர குமார். இப்படத்தின்  மூலம் சமூகத்தில் எத்தனையோ மதம் இருந்தாலும் மனிதம் ஒன்றே முக்கியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அயோத்தியில் இந்து மத நம்பிக்கையை பின்பற்றும் யாஷ்பால் சர்மா மிகவும் கண்டிப்பான கணவராகவும், தந்தையாகவும் உள்ளார். அயோத்திகில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை செல்ல திட்டமிடும் யாஷ்ப்பால், தன்னுடைய குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு வரும் வழியில் கார் டிரைவருடன் சண்டை போட நேருகிறது. 


பின்னர் எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த யாஷ்பால் மனைவிமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழக்கிறார். மனைவி பிணமானதை கூட கண்டு கொள்ளாமல்,  தன்னுடைய மதம் தான் தூக்கி பிடித்து பேசி, மத ரீதியாகவே இறுதிச் சடங்கு நடத்த வேண்டும். உடல்கூறாய்வு செய்ய கூடாது என மருத்துவர் மற்றும் காவல்துறையுடன் சண்டை போட்டு அயோத்திக்கு செல்ல தயாராகிறார்.

அதே நேரம் மொழி தெரியாத ஊரில், தாயை இழந்து அல்லாடிக் கொண்டிருக்கும் கதாநாயகியின்  உணர்வுகளை புரிந்து கொண்டு, மனிதாபிமானத்தோடு உதவுவதற்காக வருகிறார் சசிகுமார். பல்வேறு சவால்களைத் தாண்டி இறந்த நாயகியின் தாயின் உடலை எப்படி சசிகுமார் அயோத்திக்கு எடுத்துச் செல்கிறார் என்பதை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும்  கூறி உள்ளது இப்படம்.


ஒவ்வொரு கதாபாத்திரமும் தேவையான நடிப்பை மட்டுமே கச்சிதமாக கொடுத்துள்ளனர். உண்மை சம்பவம் என்பதால் எவ்வித சினிமா தனமும் இல்லாமல் நேர்த்தியாக செல்கிறது கதைக்கலாம். அதேநேரம் இக்கதை எவ்வித சர்ச்சையிலும் சிக்காத அளவிற்கு கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் மந்திர குமார். இறுதியில் என்ன நடக்கிறது? யாஷ்பால் மனிதத்தை ஏற்றாரா... என பல கேள்விகள் இருந்தாலும் யாரும் எதிர்பாராத கிளைமேக்ஸ் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கை தட்டல்களை அள்ளியுள்ளார் இயக்குநர். மொத்தத்தில் ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வுகளுடன் மனிதத்தை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.



Advertisement

Advertisement