• Sep 21 2024

என்னைக் கேட்காமல் எப்படி அந்த பெயரை வைப்பார்கள்- குலுகுலு திரைப்படத்தின் மீது மான நஷ்ட வழக்கை பதிவு செய்த கூல் சுரேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவராக வலம் வருபவர் தான் கூல் சுரேஷ். இவர் சமீபகாலமாக திரையரங்கிலேயே இருந்து வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களையும் பார்வையிட்டு வருகின்றார்.

பெரும்பாலும் படம் குறித்த பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களையே இவர் பதிவிட்டு வருகிறார்.இதனால் இவரது விமர்சனங்களையும் படம் குறித்த பேட்டியையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர் ஒவ்வொரு படத்தின் போதும், வெந்து தணிந்தது காடு என்றும் அந்த படத்தின் பெயரை சொல்லி வணக்கத்தை போடு என்றும் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சில நேரங்களில் அபத்தமான கமெண்ட்களை இவர் வெளியிட்டாலும் அதுவும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக காணப்படுகிறது. சமீபத்தில் மாமனிதன் படத்தின் ரிலீசின்போது திரையரங்கு ஒன்றில் போய் இரவு தூங்கிவிட்டு காலையில் பல் துலக்கிக்கொண்டே இவர் படம்குறித்து பேட்டியளித்தார்.

இவ்வாறு தொடர்ந்து பல பேட்டிங்களை ஒவ்வொரு படத்தின்போதும் வெளியிடும் கூல் சுரேஷ், நேற்றைய தினம் வெளியான சந்தானத்தின் குலுகுலு படத்திற்கும் சிறப்பான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். படத்தில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான சந்தானத்தை பார்க்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

படம் கொரியன் ஸ்டைலில் அமைந்துள்ளதாக தெரிவித்த சுரேஷ், இந்தப் படத்தின் நடிகர்கள் யாரும் திரையரங்குகளில் படத்தை பார்க்க வராதது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய பெயர் கூல் சுரேஷ் என்றபோதிலும், அனைவரும் தன்னை குலுகுலு என்றுதான் அழைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானம், குலுகுலு படத்தின் தயாரிப்பாளர் ராஜ் நாராயணன் உள்ளிட்டவர்களும் தன்னை அப்படித்தான் அழைப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அப்படி இருக்கையில் தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் தன்னுடைய பெயரை படத்திற்கு வைத்துள்ளதாகவும் கூல் சுரேஷ் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.

இது சம்பந்தமாக குலுகுலு படத்தின் தயாரிப்பாளர் ராஜ் நாராயணன் மீது மான நஷ்ட வழக்கை பதிவு செய்யவுள்ளதாகவும் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ராஜ் நாராயணன் நண்பனான தனக்கு துரோகம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் படத்திற்கு நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement