• Nov 14 2024

படம் பார்க்காமலேயே எப்படி விமர்சிப்பீர்கள்- கமல்ஹாசனைத் திட்டிய தி கேரளா ஸ்டோரி பட இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த மே 5-ந் தேதி இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி.இப்படத்திற்கு ரிலீசுக்கு முன்பே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு காரணம் இப்படத்தில் கேரளாவை சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமிய நாடுகளுக்கு வேலைக்காக அழைத்துச் சென்று அங்கு அவர்களை மதமாற்றம் செய்து பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்று இருந்தன.

 ரிலீசுக்கு முன்பே இப்படத்திற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதால் இப்படம் நாடெங்கும் மே 5-ந் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன பின்னர் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதே வேளையில், பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது.


இப்படி பல்வேறு எதிர்ப்புகளை கடந்து ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளது. சமீபத்தில் இப்படம் குறித்து கருத்து தெரிவித்திருந்த கமல்ஹாசன், தான் பிரச்சார படங்களுக்கு எதிரானவன் என்றும், தி கேரளா ஸ்டோரி படத்தின் போஸ்டரில் இது உண்மை சம்பவம் என போட்டால் மட்டும் போதாது, நிஜமாகவே அது உண்மை சம்பவமாக இருக்க வேண்டும். அப்படத்தில் இடம்பெற்றுள்ளது உண்மை சம்பவமே இல்லை என்று பரபரப்பு கருத்து தெரிவித்து இருந்தார்.

கமல்ஹாசனின் இந்த விமர்சனத்தை பார்த்து கடுப்பான இயக்குநர் சுதிப்தோ சென், இது போன்ற விமர்சனங்களுக்கெல்லாம் நான் பதிலளிப்பதில்லை. முதலில் பதிலளித்து வந்த நான் பின்னர் அதை நிறுத்தியதற்கு காரணம், தி கேரளா ஸ்டோரி படத்தை பிரச்சார படம் என்று சொன்னவர்கள் கூட படம் பார்த்த பின்னர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர். படம் பார்க்காமலேயே அதனை பிரச்சார படம் என்று விமர்சிக்கிறார்கள்.


பாஜகவினருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது என்பதற்காக இது அவர்களுடைய படம் என்று அர்த்தமல்ல. உலகளவில் 37 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இப்படம் பிடித்திருக்கிறது. படம் பார்க்காமலே விமர்சிப்பவர்களுக்கு நான் விளக்கம் கொடுப்பதில்லை” என கமல்ஹாசனுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் 


Advertisement

Advertisement