• Sep 20 2024

சரியாகச் செய்த கமலுக்கு வழங்காமல் ரஜினிக்கு மட்டும் இதை எப்படி வழங்குவீங்க- கொந்தளிக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் தான் ரஜினி மற்றும் கமல். இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் பல நண்பர்களாக இருந்த வருகின்றனர்.இருப்பினும் நடிப்பில் சீனியர் கமல் தான்.ஆனால் ரஸினி தனது இளம் வயதில் தான் அறிமுகமானார்.

மேலும் ரஜினி ஆரம்பத்தில் வில்லன், சப்போர்டிங் ரோங்களிலேயே நடித்து வந்தார். அதன் பிறகு தான் கதாநாயகன் ஆனார். கமல் 225 க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் அவரை இரண்டாவது இடத்திலேயே ரசிகர்கள் வைத்துள்ளனர். அதே சமயம் 168 படங்களில் நடித்த ரஜினியை தான் சூப்பர் ஸ்டார் என சொல்லி, முதலிடத்தில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் கெளரவம், அடையாளம், புதுமைகள் பல செய்பவர் என புகழப்பட்டாலும் கமலுக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் இதுவரை கிடைக்கவில்லை என்பதே தற்போது வரை கமல் ரசிகர்களின் ஆதரங்களாக இருந்து வருகிறது.

மத்திய விருதுகளில் கூட கமலுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரஜினிக்கு பத்மபூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது. கமல், பிரான்ஸ் அரசின் செவாலியர் விருதினை பெற்றிருந்தாலும் இந்திய அரசால் வழங்கப்படும் சினிமா துறைக்கான உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதும் ரஜினிக்கு தான் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அதிகம் வரி செலுத்துபவர் என பாராட்டி, ரஜினிக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரியை முறையாக செலுத்து வருபவர் கமல். இதை பலமுறை தனது பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசிற்கு எதிராகவும், தமிழக அரசிற்கு எதிராகவும் பேசும் போதெல்லாம், இதற்காக என் வீட்டில் இன்கம் டேக்ஸ் ரைடு வந்தாலும் கவலையில்லை. ஏனெனில் நான் முறையாக வரி செலுத்துபவன் என்பது எனக்கும் தெரியும், வருமான வரித்துறைக்கும் தெரியும் என சவால் விட்டு பேசி உள்ளார்.

ரஜினி மீதாவது சில ஆண்டுகளுக்கு முன் வருமான வரித்துறை வழக்கு தொடுத்திருந்தது. கோர்ட் வரை சென்ற பிறகே வருமான வரித்துறை தங்கள் வழக்கை வாபஸ் பெற்றது. ஆனால் கமலுக்கு அப்படி எதுவும் இல்லாத போது ஏன் அவருக்கு மட்டும் உரிய அங்கீகாரத்தை தர மறுக்கிறார்கள் என ரசிகர்கள் ஆதங்கத்தில் பொங்கி, அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இதற்கு பதிலளித்துள்ள சிலர், கமலுக்கு வருமான வரித்துறை விருது வழங்கவில்லை என யார் சொன்னது. சரியாக விஷயம் தெரிந்து கொண்டு எதையும் பேசுங்கள். 2011 ம் ஆண்டே கமலுக்கு 'சரியாக வருமான வரி செலுத்தி சிறந்த குடிமகனுக்கு உதாரணமாக விளங்குபவர்' என சென்னை வருமான வரித்துறை விருது வழங்கி கெளரவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement