• Nov 14 2024

நீங்க எப்பிடி இந்த மாதிரி என்னைத் தொடலாம்-பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளரை கடுமையாகத் திட்டிய பூர்ணா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2008ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பூர்ணா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கின்றார். இது தவிர வெப் சீரியல்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வரும் இவருடைய இயற்பெயர் ஷம்னா கசிம். திரைப்படங்களுக்காகத் தான் பூர்ணா என்று மாற்றி வைத்துள்ளார்.

இவர் நேற்றைய தினம் தான் திருமணம் செய்துகொள்ள போகும் நபருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர். இது தவிர ஸ்ரீ தேவி ராமா கம்பனி என்னும் ரியாலிட்ரி ஷோவில் நடுவராக இருந்து வருகின்றார்.

திறமைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் பூர்ணா போட்டியாளர்களுக்கு அட்வைஸ்ட் பண்ணிட்டு இருக்கும் போது இமானுவேல் என்னும் போட்டியாளர் அவரின் முதுகைத் தொட்டு விடுகின்றார். இதனால் ஆத்திரமடைந்த பூர்ணா நீங்க எப்பிடி என்னைத் தொடலாம் என்று டென்ஷனாகி திட்டி விடுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் ராஷ்மி கௌதமும் அவரை திட்டி விடுவதோடு ராஷ்மி திடீரென மயங்கி விழுவது போலவும் காட்டுகின்றனர். இதனால் இதனால் இந்த ப்ரோமோ உண்மையாக இருக்குமா? இல்லை என்றால் ப்ஃராங்காக இருக்குமா? என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இருப்பினும் நிகழ்ச்சி பார்த்தால் தான் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement