• Nov 17 2024

"அது எப்படிங்க பப்ளிக்ல சொல்றது.." ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய நடிகை கிருத்திகா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரை நடிகைகளுக்கு ஏத்தற்போல சின்னத்திரை நடடிகைகளுக்கும் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு உண்டு

அப்படி சீரியல் நடிக்க வந்து, பல தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

மேலும் இவர் மெட்டி ஒலி, செல்லமே, கல்யாண பரிசு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து, பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளார்.

தற்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டவர் இல்லம்' தொடரிலும், கடந்த 3 ஆண்டுகளாக நடித்து வருகின்றார். இந்த தொடரில் வில்லி மற்றும் நாயகியாக மாறி மாறி நடித்து வரும் கிருத்திகாவின் கதாபாத்திரம், பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் கிருத்திகா, தன்னுடைய சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவாக இருக்க கூடியவர். அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த சில விஷயங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

கிருத்திகாவிடம் ரசிகர் ஒருவர் மொபைல் எண்ணை கேட்க, இதற்கு பதிலளித்த கிருத்திகா அண்ணாமலை, "இந்த கேள்வியை நீங்கள் மட்டுமே கேட்கவில்லை. பல பேர் கேட்டு இருக்காங்க. அது எப்படி யாரென்று தெரியாத ஒரு பெண்ணிடம் போன் நம்பரை பொது வெளியில் கேட்கிறீர்கள்?. இதற்கு எப்படி நான் பதில் சொல்ல முடியும். மேலும் இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்டால், நான் அதனை நிச்சயம் தவிர்க்க தான் செய்வேன். பின்னர், நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை என தனியாக வந்தும் நீங்கள் மெசேஜ் செய்கிறீர்கள். இதற்கு நான் எப்படி பதிலளிப்பேன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல பிரபலங்களும் இது போன்ற கேள்வியை தவிர்க்கும் நிலையில், கிருத்திகா அதற்கு பதிலடி கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதே போல, அதிக உயரம் பற்றி ரசிகர் கேட்க, உயரம் தனது பிளஸ் பாய்ண்ட் தான் எனவும் கிருத்திகா பதிலளித்துள்ளார்.

முதல் Crush யார் என்பது பற்றியும், ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கிருத்திகா, "ஸ்கூல் படிக்கும் நேரத்தில் எனது மாமா பையன்" என பதிலளித்துள்ளார். இது போல, அவர் அளித்த வேறு சில பதில்களும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகின்றது.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Post Settings

Advertisement

Advertisement