• Nov 19 2024

48வயதில் எப்படி கர்ப்பமானீங்க...? நிர்வாணப் போட்டோவை வெளியிட்டு தக்க பதிலடி கொடுத்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல ஹாலிவுட் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஹிலாரி ஸ்வான்க். இவர் 1997-ஆம் ஆண்டு நடிகரும் இயக்குநருமான சாட் லவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அந்த தம்பதியினருக்கு குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை. இதனால் விரக்தியடைந்து அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். 


இதனையடுத்து வேறொரு பிரபலத்துடன் ஹிலாரி ஸ்வான்க்க்கு நிச்சயம் ஆனது. ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை. இவ்வாறு அடுத்தடுத்து வந்த தோல்விகளால் குடும்ப வாழ்வில் மிகவும் விரக்தி அடைந்த இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு தொழிலதிபர் பிலிப் ஸ்னைடர் என்பவருடன் காதலில் விழுந்து அதே ஆண்டு அவரை திருமணமும் செய்துக் கொண்டார்.


இந்நிலையில்  ஹிலாரி ஸ்வான்க்கின் ஆசையை அவரின் இரண்டாவது கணவர் பூர்த்தி செய்து விட்டார். அந்தவகையில் கடந்த ஆண்டு இறுதியில் தனது கர்ப்பத்தை அறிவித்திருந்த ஹிலாரி ஸ்வான்க் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.


இவ்வாறு நடிகை தனக்கு ட்வின்ஸ் குழந்தை பிறந்ததை சந்தோசமாக அறிவித்த நிலையில், 48 வயதில் எப்படி குழந்தை பிறந்தது என நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்ய தொடங்கி விட்டனர். இத்தகைய ட்ரோல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக கர்ப்பமாக இருந்தபோது முழு நிர்வாணமாக எடுத்த தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படத்தையே வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகை ஹிலாரி ஸ்வான்க்.


Advertisement

Advertisement