• Sep 21 2024

ரூசோ சகோதரர்களுக்கு என்னை எப்படித் தெரியும்?- எனக்கே கென்பியூட்டாத் தான் இருக்கு- பளிச் என்று கூறிய தனுஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி கிரேமேன் படம் நாளை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் தி கிரேமேன் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், மும்பையில் நேற்று திரையிடப்பட்டது. அந்த விழாவுக்கு தனுஷ் வேட்டி அணிந்து வந்திருந்தார் .

இந்த நிகழ்ச்சியில் கத்ரீனா கைஃப்பின் கணவரும் பாலிவுட் நடிகருமான விக்கி கவுஷல் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் அந்த ப்ரீமியர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அப்போது பேட்டி எடுத்த நபர், தி கிரேமேன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய விசயங்கள் ஏதாவது சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு, தனுஷ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தி கிரேமேன் படத்திற்காக தன்னை தேர்வு செய்ததே நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவே, கிடைக்கிற கேப்பில் அனைவரிடமும் கேட்டு விட்டேன், ரூசோ சகோதரர்களுக்கு என்னை எப்படித் தெரியும்? என்று செட்டில் ஒருத்தரையும் விடாம கேட்டுட்டேன்.என அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

https://twitter.com/iammoviebuff007/status/1549831261174534144

இப்படத்தில் உலகிலேயே கொடூரமான கொலைகாரன் அவிக் சான் எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் படத்தில் நடித்துள்ளார்.இது தவிர தனியாக தனுஷுக்கு ஒரு படத்தை இயக்கவும் திட்டம் போட்டு வருவதாக ரூசோ சகோதரர்கள் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement