• Sep 20 2024

'எதிர்நீச்சல்' சீரியலில் நந்தினியாக நடிக்க ஹரிப்பிரியா வந்தது எப்படி..? முதன் முறையாக உண்மையை உடைத்த இயக்குநர் திருச்செல்வம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகர்கள் அனைவருமே ஏதோ ஓர் வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.


இந்த சீரியலில் உள்ள அத்தகைய ஒரு அருமையான கதாபாத்திரம் தான் நந்தினி. இந்த கதாபாத்திரத்தில் நடிகை ஹரிப்பிரியா நடித்து வருகின்றார். இவருக்கு நிறையவே ரசிகர் பட்டாளம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான்.


'எதிர்நீச்சல்' சீரியலிற்குள் ஹரிப்பிரியா எப்படி நுழைந்தார் என்பது குறித்த தகவலை சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இந்த சீரியலினுடைய இயக்குநர் திருச்செல்வம் அவர்கள் பகிர்ந்துள்ளார்.

அந்தவகையில் அவர் இது குறித்துப் பேசுகையில் "ஹரிப்பிரியாவை நான் ஒரு சன் அவார்ட்டில் தான் பார்த்தேன், அதில் காமெடி சீன் ஒன்றுக்கும் ஹரிப்பிரியா பயங்கரமான ஒரு ரியாக்ஷன் கொடுத்தா, இந்தப் பொண்ணோட நடிப்பு நல்லா இருக்கே என்றிட்டு நான் அப்புறமா அவங்களை பற்றி விசாரிச்சேன், அப்போ நடிச்சிட்டு இருக்கா சீரியலில் என்று சொன்னார்கள், பிறகு அதிலிருந்து அவங்கள கமிட் பண்ணி இந்த சீரியலிற்குள் எடுத்தோம்" எனக் கூறியிருக்கின்றார்.


Advertisement

Advertisement